India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்கு சென்றன. அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 மீனவர் 3 விசைப் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு அருகே இன்று(நவ.,10) காலை சிறைபிடித்துச் சென்றனர். அடிக்கடி சிறை பிடிக்கப்படும் இச்சம்பவத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை சீனிவாசன் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசால் கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் இந்திய கடலோர கப்பல் படை மற்றும் இந்திய கப்பல் படையில் சேருவதற்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர தகுதி உள்ள மீனவ வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் கடலோர பாதுகாப்பு குழுமம் கடற்கரை காவல் நிலையம், மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். *பகிரலாம்*SHARE*
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் தற்போது விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.(அடங்கல் சான்று, கூட்டுறவு வங்கி கணக்கு புத்தகம், சிட்டா நகல், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, 4 பாஸ்போர்ட் போட்டோ ) ஆவணங்களுடன் விண்ணப்பித்து விவசாயிகள் பயிர்க்கடன் பெறலாம். இதில் கால தாமதம் ஏற்பட்டால் வட்டார அலுவலர்களிடம் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று(நவ.,9) மதுரை வந்து மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, இரவு ராமேஸ்வரம் சென்று மறுநாள்(நவ.10) காலை ராமேஸ்வரத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் தமிழக ஆளுநர் ரவியின் ராமேஸ்வரம் வருகை திடீரென தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை பாலசுப்ரமணியன் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்கிழக்கு பருவமழையின் எதிரொலியாக கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது. அந்த வகையில் , ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர் & மதுரை ஆகிய மாவட்டங்களில் நாளை காலை 8.30 கனமழை முதல் கனமழைக்கு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மக்கள் இந்த சூழலிற்கேற்ப முன் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. *பகிரவும்* SHARE*
இராமநாதபுரம் மாவட்டத்தில் நியாய விலை கடைகள் குறைதீர்க்கும் முகாம் நாளை காலை 10 மணி முதல் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் புதிய குடும்ப அட்டை நகல்அட்டை விண்ணப்பித்தல் மற்றும் கைபேசி எண் பதிவு(அ)மாற்றம் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் ஆலோசனை குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தலைமையிலான இந்த குழுவில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.தர்மர் எம்பி உறுப்பினராக இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்ட ரயில் தேவைகளை நிறைவேற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என மாவட்ட ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை (நவ-9) வருகை தருகிறார். மதுரையில் இருந்து கார் மூலம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து, பின் அங்கிருந்து ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி, நாளை மறுநாள் (நவ.10) காலை ஸ்படிக லிங்கம் பூஜை பார்த்து விட்டு சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.
Sorry, no posts matched your criteria.