Ramanathapuram

News April 13, 2024

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் திடீர் சோதனை

image

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் செய்தார். இதற்காக அவர் மதுரையிலிருந்து தனி ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் வந்தார். பிரச்சாரத்திற்கு சென்ற பின்னர் அவர் வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில் பணமோ பொருட்களோ கைப்பற்ற படவில்லை.

News April 13, 2024

ராம்நாடு: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று ராமநாதபுரத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் தமிழகத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 13, 2024

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு

image

அம்பேத்கர் பிறந்த நாள் விழா நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே புல்லந்தை கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை (ஏப்.14) மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்வில் நிர்வாகிகளும், தொண்டர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

News April 13, 2024

OPS-க்காக ஓட்டு வேட்டை நடத்தும் இஸ்லாமிய பெண்!

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என இஸ்லாமிய பெண் சபீனா என்பவர் கிராமம் கிராமமாக சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் வெற்றிபெற்றால் தொகுதி வளர்ச்சி பெறும் என பெண்களிடம் விளக்கி வருகிறார்.

News April 13, 2024

மோடிக்கு பிடித்த அரசியல் தலைவர்

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தேசிய கூட்டணி வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இன்று மதியம் பிரசாரம் செய்தார். பிரதமர் மோடிக்கு பிடித்த அரசியல் தலைவர் ஓபிஎஸ், ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையை பெற்றவர் ஓபிஎஸ். நாடாளுமன்றம் செல்லும் போது உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.

News April 13, 2024

அமித்ஷா – தேனி எம்பி ரவீந்திரநாத் சந்திப்பு

image

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத். தேனி எம்பியாக உள்ள இவர் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்ய வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்தித்துப் பேசினார்.

News April 13, 2024

ராமநாதபுரத்தில் காலை 10 மணிக்குள் மழை

image

ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 13, 2024

ராம்நாடு: பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

image

அதிமுக, தேமுதிக கூட்டணி கட்சி ஆதரவுடன் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஜெயபெருமாளை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் கமுதி பேருந்து நிலையம் அருகே இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். மாவட்டத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் எனவும் உறுதியளித்தார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

News April 12, 2024

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை வெளியீடு

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் இந்திய கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை இன்று இரவு ராமநாதபுரத்தில் வெளியிடப்பட்டது.
துணைத்தலைவரும் வேட்பாளருமான நவாஸ் கனி, மாநில பொதுச் செயலர் அப்துல் சமது, மாநில பொருளர் ஷாஜகான், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர் வெளியிட்டனர்.

News April 12, 2024

டிப்பர் லாரி -மோதல்: 4 பெண் உள்பட 5 பேர் படுகாயம்

image

ராமேஸ்வரத்திலிருந்து டிப்பர் லாரி ராமநாதபுரத்திற்கு இன்று மாலை சென்றது. மண்டபம் அருகே குஞ்சார்வலசை சோதனை சாவடி அருகே சென்ற போது எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநர், 4 பெண்கள் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியோரை தீயணைப்பு வீரர்கள், போலீசார் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பினர்.
இது குறித்து மண்டபம் போலீசார் விசாரிக்கின்றனர்.