India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி DSP கௌதம் கோட்டைப்பட்டினம் டவுன் ரமேஷ் கந்தர்வகோட்டை சுகுமாரன் இன்ஸ்பெக்டர் அறந்தாங்கி ராஜகோள்பால் பொன்னமராவீதி சக்திவேல். மேலும் பொதுமக்கள் புகார் செய்ய 949801800730 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும்.
ஜெகதாபட்டினத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 14 மீனவர்களை, நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று, இன்று இரவு அல்லது நாளை காலை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணமேல்குடி கடற்கரையிலிருந்து இலங்கை பேச்சாளை கடற்கரைக்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்பிலான 188 கிலோ கஞ்சா பொட்டலங்களை நடுக்கடலில் வைத்து இலங்கையை சேர்ந்த படகில் மாற்ற முயன்ற போது, இலங்கை கடற்படை ரோந்து படகை கண்டதும் தமிழக மீன்பிடிப்படகில் இருந்த கடத்தல் காரர்கள் கஞ்சா மூட்டைகளை கடலில் வீசி சென்றுள்ளனர்.
புதுக்கோட்டையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் 10-ஆம் தேதி முதல் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெற உள்ளது. பல்வேறு பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்தவர்கள் தவறாமல் இப்போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களின் தரம் குறித்து உர ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, உரங்களை அதிக விலைக்கும், விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் வடகாடு, மாங்காடு, நெடுவாசல், கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 5-10 டன் முதல் கொள்முதல் செய்யப்படும் நிலையில், வரத்து அதிகரிப்பால் விலை கடுமையாக சரிந்துள்ளது. கிலோ ரூ.100-க்கு விற்பனையான எலுமிச்சை தற்போது 50 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக்கூட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட அளவில் சிறப்பாக நடத்துவது தொடர்பாக, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம், கலெக்டர் அருணா, தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகேசன், முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.8) புதுகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் அது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.6) மாலை 4 மணிக்கு புதுகை அசோக் நகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் விராலிமலை எம்எல்ஏ விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற உள்ளது.
ஆலங்குடி அருகே கீரமங்கலம் செரியலூர் ஜெமின் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி மகன்வெங்கடேசன் (26). இவர் கீரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அறந்தாங்கியில் இருந்து கறம்பக்குடி செல்லும் அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று உயிரிழந்தார். கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தில் கண்ணன், நாச்சியப்பன் ஆகியோர் நேற்று இரவு (செப்.5) ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் கண்ணன் பீர் பாட்டிலால் நாச்சியப்பனை தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாச்சியப்பன் அருகில் கிடந்த கல்லை எடுத்து கண்ணன் தலையில் போட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.