Pudukkottai

News September 12, 2024

புதுகை எம்எல்ஏ “வாக்கிங் வித் MLA” என்ற புது முயற்சி

image

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 10க்கு உட்பட்ட பகுதிகளில் “வாக்கிங்_வித்_MLA” என்ற நிகழ்வில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பொதுமக்களிடம் கோரிக்கைகளை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் பால்ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News September 12, 2024

வாக்கிங் வித் எம்எல்ஏ பொதுமக்கள் வரவேற்பு

image

தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலோடு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு வாக்கிங் வித் எம்எல்ஏ என்ற நிகழ்வின் மூலம் இன்று (செப்12) மாலை 5 முதல் 7 மணி வரை புதுகை மாநகாரட்சி 10வது வார்டு முழுவதும் பொதுமக்களின் இல்லங்களுக்கு நடந்தே சென்று புதுகை எம்எல்ஏ டாகடர்.வை.முத்துராஜா பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

News September 12, 2024

விராலிமலை அருகே லாரி பறிமுதல் ஒருவர் கைது

image

விராலிமலை அருகே மேட்டுப்பட்டி பகுதியில் செம்மன் கடத்துவதாக விராலிமலை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்மன் கடத்திய லாரியை பறிமுதல் செய்த விராலிமலை போலீசார் பாரப்பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி (வயது+49) என்பவரை கைது செய்தனர்.

News September 12, 2024

திருக்கோகரணத்தில் வேளாண் முகாமை துவக்கி வைத்த அமைச்சர்

image

திருக்கோகர்ணம் அய்யனார் திடலில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடர்பான முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சற்றுமுன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் துறை தொடர்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகளுக்கு பயன்படும் டிராக்டர்களை எவ்வாறு பராமரிப்பது, ஜேசிபி இயந்திரங்கள் பராமரிப்பது போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

News September 12, 2024

புதுக்கோட்டை அருகே குளத்தில் வாலிபர் சடலம்

image

திருமலைராயன் சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட சூளைமேடு பகுதியில் உள்ள சேத்தி குளத்தில் வாலிபர் சடலம் கிடப்பதாக கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு, கொலையா? தற்கொலையா? என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் போலீசார் இந்த நபர் எந்த கிராமத்தை சேர்ந்தவர் என பொது மக்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 12, 2024

புதுக்கோட்டையில் ஒரே காரணத்தினால் 6 பேர் மாயம்

image

அறந்தாங்கி அடுத்த அமராவதி நகர் சினேகா, குளத்தூர் அண்டக்குளம் காயத்ரி, இவரது இரண்டு வயது மகனுடன் காணவில்லை, திருமயம் அருகே 17 வயது இளம்பெண், செம்பட்டி விடுதி நந்தினி, இலுப்பூர் அருகே 17 வயது இளம்பெண் உள்ளிட்ட ஆறு பேரும் நேற்று முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இவர்கள் 6 பெரும் ஒரே காரணத்தை கூறி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Shareit

News September 12, 2024

புதுக்கோட்டை ஆட்சியர் பங்கேற்கும் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் காலை 09.30 மணியளவில், திருக்கோகர்ணம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரில் உள்ள அய்யனார் திடலில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான முகாம் மற்றும் காலை 10:00 மணியளவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வு கூடத்தில், “உயர்வுக்குப்படி” நிகழ்ச்சியினை துவக்கி வைக்க உள்ளார்.

News September 11, 2024

பெண்கள் சுயதொழில் செய்ய அழைப்பு

image

புதுகை மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்கள், சுயதொழில் செய்ய விரும்புவர்கள் 50,000 மானியத்துடன் நடமாடும் உணவகம், காய்கறி, பழங்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வகையான சுய தொழில் செய்ய, ஆண்டு வருமானம் 1,20,000க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் நகல் ஆகியவற்றை இணைத்து குடும்ப நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஷேர் செய்யவும்

News September 11, 2024

புதுக்கோட்டையில் குழந்தை உட்பட 3 பேர் மாயம்

image

தஞ்சாவூரை சேர்ந்த அந்தோணி தாஸுக்கும் இவரது மனைவிக்கும் மனக்கசப்பு இருந்து வந்தது. இந்நிலையில் அறந்தாங்கி எல்என் புரம் தாய் வீட்டிற்கு வந்த அவர் இன்று வரை காணவில்லை. அவருடன் 2 வயது மகனை அழைத்து சென்றுவிட்டார்‌. இதே போல் வடகாட்டை சேர்ந்த வினோதினி கடந்த 9ஆம் தேதி இரவு கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 10, 2024

வே டு நியூஸ் எதிரொலி மாநகராட்சி வாகனத்திற்கு புதிய கண்ணாடி

image

புதுக்கோட்டை மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் லாரி ஒரு பக்க கண்ணாடி இல்லாமல் இருந்தது. இதனை சுட்டிக்காட்டி வே டு நியூஸ் செயலியில் செய்தி வெளியாகியது. இதன் எதிரொலியால் மாநகராட்சி வாகனத்திற்கு தற்பொழுது புதிய கண்ணாடி அமைக்கப்பட்டு, புதிய பெயிண்ட் அடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் உள்ளது. வேடு நியூஸ் எதிரொலி செய்தியால் இந்த நன்மை நடந்துள்ளது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!