Pudukkottai

News August 26, 2024

இளைஞர் கொலை – 8 பேர் கைது

image

அறந்தாங்கி அருகே ஹோட்டலில் சாப்பிட வந்த கருவட்டான்குடியை சேர்ந்த ஜான் என்பவர் ஆம்லெட் கேட்டுள்ளார். இதில் ஹோட்டல் உரிமையாளருக்கும் இவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. தகராறை விளக்கி விட வந்த அதே பகுதியை சேர்ந்த பிரபுவை சரமாறி தாக்கினர் இதில், அவர் உயிரிழந்தார். இதனை கண்டித்து அவரது உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஜான் உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

News August 26, 2024

சென்டர் மீடியனில் மோதி ஒருவர் பலி

image

புதுக்கோட்டை டவுன் மாப்பிள்ளையார் குளம் பழனியப்பா நகரைச் சேர்ந்தவர் நபிக்கான் (27). இவர், நேற்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து திருமயம் வழியாக புதுக்கோட்டைக்கு பைக்கில் வந்தார். அப்போது லெணா விலக்கு அருகே வந்தபோது நிலைதடுமாறி சாலை நடுவில் இருந்த சென்டர்மீடியனில் மோதி படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

News August 26, 2024

புதுகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழகம் முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்கு ஆன்லைன் முன் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முன்பு கூறப்பட்ட 25ஆம் தேதி கடைசி நாள் என்பதை செப்டம்பர் 2ஆம் தேதி ஆன்லைன் முன்பதிவுக்கு கடைசி தேதி என புதுகை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். மேலும், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

News August 25, 2024

புஷ்கரம் வேளாண்மை கல்லூரி விழாவில் தம்பி ராமையா

image

திருவரங்குளத்தில் இயங்கி வரும் புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி 7 ஆம் ஆண்டு விழாவில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தம்பி இராமையா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி தாளாளர் இரத்தினம் நிர்வாக இயக்குநர் துரை மற்றும் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

News August 25, 2024

புதுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் முகாம்

image

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி திருமயம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பாளையூர் குழலை சமுதாயக் கூடத்திலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், நாகுடி ஊராட்சி, நாகுடி ஆர்.ஆர்.பி. டீலக்ஸ் மஹாலிலும், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், நம்பம்பட்டி சமுதாயக் கூடத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News August 25, 2024

புதுக்கோட்டை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

image

சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கோரிக்கையின் அடிப்படையில், வரலாற்றில் முதன் முறையாக பெங்களூரு வழியாக மைசூருக்கு மாநாடு – சிவகங்கை – காரைக்குடி வழியாக நேரடி சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் 05.09.2024, 08.09.2024 (வியாழன், ஞாயிற்றுக்கிழமை) நாளில் செங்கோட்டையில் இரவு 7:45 மணிக்கு புறப்படும். எனவே முன்பதிவு செய்பவர்கள் செய்து கொள்ளலாம். ஷேர் செய்யவும்

News August 25, 2024

நடிகர் கமலை சந்தித்த புதுக்கோட்டை முன்னாள் எம்.பி.

image

புதுக்கோட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் கட்சி மாநில தலைவருமான சு.திருநாவுக்கரசர் மகன் திருமண விழாவை முன்னிட்டு இன்று சென்னையில் மக்கள் நீதி மைய தலைவரும் நடிகருமான கமலஹாசனை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார்.

News August 25, 2024

அன்னவாசலில் தவித்த நட்சத்திர ஆமை

image

அன்னவாசல் சாலையில் இன்று நட்சத்திர ஆமை ஒன்று சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிளின் சப்தத்தை கேட்டு சாலையின் நடுவே நின்றுவிட்டது. அந்த ஆமை அவ்வழியாக வரும் வேறு வாகனங்கள் அடிபட்டு விடுமோ என்ற அச்சத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்த அபிபுல்லா என்பவர் குச்சியின் உதவியுடன் சாலை கடக்க உதவினார். மேலும் ஆமையை அவ்வழியாக சென்றவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

News August 24, 2024

திருமாவளவனை சந்தித்த புதுகை முன்னாள் எம்.பி.

image

சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சு. திருநாவுக்கரசர் நேரில் சந்தித்தார். அப்போது தனது மகன் எஸ்.ஆர்.டி. சாய் விஷ்னுவின் திருமண அழைப்பிதழை வழங்கினார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் விசிக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News August 24, 2024

புதுக்கோட்டையில் 28 மாணவர்கள் தேர்வு

image

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பிற்காக கலந்தாய்வு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் துவங்கியது. இதில் புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் மாணவ, மாணவியர்கள் 28 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் மூன்று பேருக்கு பல் மருத்துவம் படிக்கவும் இடம் கிடைத்துள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது சாதனையாக கருதப்படுகிறது.

error: Content is protected !!