India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக வேலை பார்ப்பவர் ஆறுமுகம். இவர் வீட்டில் இருந்த பினாயில் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சடையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் கழிப்பறை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பிற்படுத்தப்பட்டவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் மதிய உணவின் தரம் பற்றியும் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்த அழகப்பன்(82) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார் .அவரது கண்களை புதுக்கோட்டை தனியார் நிறுவனம் வைத்த கோரிக்கையின் பேரில் அவரது குடும்பத்தினர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கண்களை தானம் செய்தனர். இதுகுறித்து குடும்பத்தினர் தெரிவிக்கையில் அவருடைய கண்கள் தானமாக கொடுத்துள்ளோம் இறந்தாலும் மற்றவரிடம் வாழ்கிறார் என தெரிவித்தனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்பொழுது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 6000 ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார். இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அலுவலகத்தில் பெறலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 1,435 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட திட்டமிட்டு அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுகை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, விராலிமலை சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் மனு தொடர்பான விண்ணப்பங்கள் எஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆலங்குடி அருகே உள்ள வடகாடு தெற்குப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஸ்ரீநிவாஸ் (14). இவர் கொத்தமங்கலம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் நடைபெறவுள்ள கலைத் திருவிழாவிற்காக நேற்று மாலை 4மணி அளவில் சகமாணவர்களுடன் அறிவியல் ஆய்வகத்தில் நடன பயிற்சி மேற்கொண்டார். அப்போது, அவரது முகத்தில் ஆசிட் பட்டதில் படுகாயமடைந்தார்.
குளத்தூர், குற்றாண்டார்கோவில், தொண்டைமான் நல்லூர், திருமயம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் நாளை (ஆக.31) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், கீரனூர்,எழில் நகர்ஸ குன்றாண்டார்கோவில், கிள்ளுக்கோட்டை, திருமயம், மண்டையூர், புலியூர், பாரதிதாசன் பல்கலை., அண்ணா பல்கலை., உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். மேலும், மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை தொலைபேசி எண்ணுடன் பதிவிட்டு பொதுமக்கள் பெண்கள் சமூக விரோதியினால் பாதிப்படைந்தால் உடனே காவல்துறை கட்டுப்பாட்டுக்கு உள்ள எண்களை அழைக்கவும்.
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் குறைந்த வாக்குச்சாவடி குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் அதற்கு முன்னதாக புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவற்றை அரசு அதிகாரிகள் முடித்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு தயாரிக்கப்படும் சிலைகளை, பிளாஸ்டிக் ரசாயன பொருட்களை கொண்டு செய்யக்கூடாது. ஏனென்றால் இவை மனிதனுக்கு கேடு விளைவிக்க கூடியவை, மேலும் நீர் நிலைகளில் கரைத்தல் அதில் விஷம் பரவி நீர் நிலையில் வாழும் உயிரினங்கள் பாதிக்கப்படும். ஆகவே களிமண்ணை கொண்டு செய்ய வேண்டும் முடிந்த அளவு நீர் நிலைகள் பாதிக்காமல் இருக்கவேண்டும் என ஆட்சியர் அருணா கேட்டுக்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.