India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை, வாராப்பூர் நெருஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் மதியழகன் இவர் திருமயம் தாலுகா அலுவலகத்தில் நில அளவை பிரிவில் பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் அன்னவாசல் அருகே உள்ள கடம்பராயன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மதியழகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்க நாட்டை சார்ந்த காட்டுப்பட்டியில் முனீஸ்வரர் வடமாடு ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு சிறந்த காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி அணிக்கும் பல்வேறு சிறப்பு பரிசுகளை வழங்கினார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி அருகே காரையூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை, பொன்னமராவதி வட்டாட்சியர் எம்.சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த காளைகள் பங்கேற்றன. இதில் போட்டியில் கலந்து கொண்ட 10 பேருக்கு இலேசான காயம் ஏற்பட்டது. மஞ்சுவிரட்டில் 13 காளைகள் பங்கேற்றன.
புதுக்கோட்டையில் நேற்று தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ‘பாவேந்தரின் தமிழுக்கு அமுதென்று பேர்’ என்ற நிகழ்ச்சி தமிழ்ச்செம்மல் நெ.இரா.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் புலவர் கு.ம.திருப்பதி ‘பாவேந்தரும் தமிழும்’ என்ற தலைப்பில் பேசினார். கவிஞர் மு.கீதா ‘பாவேந்தரும் மொழியும்’ என்ற தலைப்பில் பேசினார். கவிஞர் காசிநாதன்
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிறைவில் பேரா. சா. விஸ்வநாதன் நன்றி கூறினார்.
திருமயம் அருகே குருவிக்கொண்டான்பட்டியைச் சேர்ந்தவர் கல்யாணி(55). இவரது மனைவி லெட்சுமி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. சம்பவத்தன்று குடும்பத்தகராறில் விஷம் குடித்து மயங்கி கிடந்த கல்யாணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பனையபட்டி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளில் (ஜூன் 3) பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளா்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது;ஏற்கெனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து சா்ச்சை கிளம்பியது. இப்போது மீண்டும் திருவள்ளுவருக்கு காவி உடை என்றால் ஆளுநரை என்னதான் செய்ய முடியும். வாதத்துக்கு மருந்து உண்டு;பிடிவாதத்துக்கு மருந்து இல்லை என கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில், உலக பல்லுயிா்ப் பெருக்க நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.மன்னா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு,மாவட்ட வன அலுவலா் சோ.கணேசலிங்கம்,கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி ஆகியோா் தலைமை வகித்தனா்.பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு பல்லுயிா்ப் பெருக்க நாளையொட்டி கட்டுரை ஓவியம் மற்றும் விநாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுகையில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டையில் இடி மின்னலுடன் மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.