India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அறந்தாங்கி அடுத்த அமராவதி நகர் சினேகா, குளத்தூர் அண்டக்குளம் காயத்ரி, இவரது இரண்டு வயது மகனுடன் காணவில்லை, திருமயம் அருகே 17 வயது இளம்பெண், செம்பட்டி விடுதி நந்தினி, இலுப்பூர் அருகே 17 வயது இளம்பெண் உள்ளிட்ட ஆறு பேரும் நேற்று முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இவர்கள் 6 பெரும் ஒரே காரணத்தை கூறி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Shareit
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் காலை 09.30 மணியளவில், திருக்கோகர்ணம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரில் உள்ள அய்யனார் திடலில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான முகாம் மற்றும் காலை 10:00 மணியளவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வு கூடத்தில், “உயர்வுக்குப்படி” நிகழ்ச்சியினை துவக்கி வைக்க உள்ளார்.
புதுகை மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்கள், சுயதொழில் செய்ய விரும்புவர்கள் 50,000 மானியத்துடன் நடமாடும் உணவகம், காய்கறி, பழங்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வகையான சுய தொழில் செய்ய, ஆண்டு வருமானம் 1,20,000க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் நகல் ஆகியவற்றை இணைத்து குடும்ப நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஷேர் செய்யவும்
தஞ்சாவூரை சேர்ந்த அந்தோணி தாஸுக்கும் இவரது மனைவிக்கும் மனக்கசப்பு இருந்து வந்தது. இந்நிலையில் அறந்தாங்கி எல்என் புரம் தாய் வீட்டிற்கு வந்த அவர் இன்று வரை காணவில்லை. அவருடன் 2 வயது மகனை அழைத்து சென்றுவிட்டார். இதே போல் வடகாட்டை சேர்ந்த வினோதினி கடந்த 9ஆம் தேதி இரவு கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் லாரி ஒரு பக்க கண்ணாடி இல்லாமல் இருந்தது. இதனை சுட்டிக்காட்டி வே டு நியூஸ் செயலியில் செய்தி வெளியாகியது. இதன் எதிரொலியால் மாநகராட்சி வாகனத்திற்கு தற்பொழுது புதிய கண்ணாடி அமைக்கப்பட்டு, புதிய பெயிண்ட் அடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் உள்ளது. வேடு நியூஸ் எதிரொலி செய்தியால் இந்த நன்மை நடந்துள்ளது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி மேற்கு மாவட்டத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அது குறித்த விவரம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாளைமாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நத்தமாடிப்பட்டி, கரம்பக்குடி, விராலிமலை உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கறம்பக்குடி, தீத்தாணிப்பட்டி சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திருப்பூரில் காஜ பட்டான் வைத்துள்ளார். செப்டம்பர் 8ஆம் தேதி இரவு சொந்த ஊருக்கு செல்வதற்கு திருப்பூர்-கோவை செல்லும் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது நான்கு சக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை செயலிழந்தது. அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு அரசு மரியாதையுடன் இன்று சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
புதுகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெறுகிறது. ஆதிதிராவிடர் பள்ளி கல்வித் தரம், பயிற்சி நிலை வசதி மேம்பாட்டிற்காகவும், விளையாட்டு வசதிகள், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மேம்பாட்டு குறித்து ஆலோசனை வழங்கி உறுப்பினர் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிட பழங்குடியினர் அமைப்பு வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
புதுகை மாவட்ட விளையாட்டு திடலில் முதலமைச்சர் கோப்பைக்காண விளையாட்டுப் போட்டிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மேகநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப் போட்டியில் சுருள்வாள் வீச்சு, கராத்தே, சிலம்பம், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
புதுகை மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இக்குழுவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சேர்ந்த நபர்கள் தகுதி உடையோர் ஆவர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.