India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அறிஞர் அண்ணாவின் 116-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறந்தாங்கி அதிமுக சார்பில் நகர செயலாளர் ஆதி மோகனகுமார் தலைமையில் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்ட நிகழ்வில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை பிசாந்து பகுதி கார்த்தி, குழந்தை இல்லாததால் வீட்டில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி இறந்தார். புதுகை பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடந்தார், இது குறித்து விஏஓ சதீஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர காவல் துறை விசாரணை, புலியூர் ரமேஷ் மனைவி சரஸ்வதி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு மரணம் அடைந்தார்.
சென்னையில் நேற்று புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய மாநில அமைச்சர் திருநாவுக்கரசர் மகன் வரவேற்பு நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கொண்டு சிறப்பித்தனர்.
புதுகை காமராஜபுரம் தமிழரசி கடைக்கு செல்வதாக போனவர் வீடு திரும்பவில்லை, அறந்தாங்கி கோட்டை பகுதியை சேர்ந்த ஜோதி கடைக்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை, அரசர் குளம் ஆர்த்தி வீட்டில் இருந்தவர் கடைக்கு சென்றவர் வரவில்லை, கீழாத்தூர் சமத்துவபுரம் சொர்ணவல்லி மகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வீட்டை விட்டு சென்றவர் காணவில்லை. கடந்த சில தினங்களாகவே மாவட்டம் முழுவதும் இந்த சம்பவம் அதிகரித்துள்ளது.
இலுப்பூர் அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியில் பொது இடத்தில் சூதாட்டம் விளையாடுவதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூதாட்டம் விளையாடிய சேதுராப்பட்டியை சேர்ந்த கருப்பையா, கலர்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி, ரகுபதி ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வு புதுக்கோட்டை மன்னர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பேர் எழுதினார்கள் மாவட்ட ஆட்சியர் அருணா நேரில் சென்று தேர்வு எழுதும் ஒவ்வொரு அறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா துணை ஆட்சியர் கௌதம் தாசில்தார் பரணி ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 மையங்களில் 15,387 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுகின்றனர். இன்று காலை காலை 9.30 – 12.30 வரை நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளை தாமதமாக வந்ததால், காவல்துறை அதிகாரிகள் கேட்டிலேயே நுழைய விடாமல் தடுத்தி நிறுத்தினர். மேலும் நேரமாகி விட்டது நீங்கள் திரும்பிச் செல்லுமாறு அறிவுரை கூறினார். இதனால் சில மாணவ மாணவிகள் வருத்தத்துடன் சென்றனர்.
கீரமங்கலம் அடுத்த பாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் அஜித் இன்ஜினியரிங் படித்துள்ளார். அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது துரதிஷ்டவசமாக பாம்பு கடித்ததில் இறந்து போனார். இது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் கீரமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 24 வயது இளைஞன் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை அடுத்த சீனமங்கலம் மாரியம்மாள் கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடகாடு பள்ளத்து விடுதியை சேர்ந்த உமா நீண்ட காலமாக வயிற்று வலியால் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்தார். அறந்தாங்கியை சேர்ந்த குமார் மோனோகுரோட்டாபஸ் குடித்து உயிரிழந்தார். நேற்று மட்டும் 3 பேர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் வருகின்ற 29ஆம் தேதி பொன்விழா ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. வர்த்தக சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் பொன்விழா ஆண்டிற்கு மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து அவருக்கு சால்வை வழங்கி மரியாதை செலுத்தினார்கள். வர்த்த சங்க செயலாளர் பொருளாளர் நிர்வாகிகள் உடன் இருந்தன.
Sorry, no posts matched your criteria.