Pudukkottai

News November 13, 2024

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

கீரனூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட கீரனூர், விராலிமலை, குண்டாண்டார்கோவில், கிள்ளுக்கோட்டை, மாத்தூர், தொண்டைமான்நல்லூர் ஆகிய பகுதிகளில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (நவ.14) 11 மணி முதல் மதியம் 1 மணி வரை புதுக்கோட்டை மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் தலைமையில் கீரனூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

News November 13, 2024

2 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது

image

ஆலங்குடி அருகே கும்பங்குளம் பேருந்து நிறுத்தத்தில்  கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், ஆலங்குடி காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது,  முகமது சாஸும், இளஞ்சேரன், இப்ராம்சா ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பின்னர் 3 பேரையும் கைது செய்து  2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

News November 12, 2024

புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேருக்கு 2 ஆண்டு சிறை

image

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 11 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  15 பேரில் 11 பேர் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளதால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 28ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டனர். இதில் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

News November 12, 2024

சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை விநியோகம்

image

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளை கலெக்டர் அருணா நேற்று வழங்கினார். மேலும் மாவட்டத்தில் உள்ள சீர்மரபினர் இன மக்களின் சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக 565 பேர் உள்ளனர். மேலும் 800 நபர்களுக்கு சீர்மரபினர் உறுப்பினர்களாக பதிவு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News November 11, 2024

புதுகை அருகே 15 பேர் கைது

image

புதுகை அருகே திருக்கட்டளை காட்டுப்பகுதியில் அனுமதியின்றி சேவல்சண்டை நடப்பதாக கணேஷ் நகர் போலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலிஸார் சேவல்சண்டையில் ஈடுபட்டிருந்த 15 பேரை விரட்டிபிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட டூவீலர்கள், கைப்பேசிகள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் ரூ 50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பந்தயம் கட்டி போட்டி நடத்தியது தெரியவந்தது.

News November 10, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (11.10.2024) திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கலந்துகொண்டு பயனடைய மாவட்ட ஆட்சியர் அருணா அழைப்பு கொடுத்துள்ளார்.

News November 10, 2024

காசி அயோத்தி ரயில்கள் புதுகையில் நிற்க கோரிக்கை

image

ராமேஸ்வரத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக சென்னை வட மாநிலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், ராமேஸ்வரம்-பனாரஸ், ராமேஸ்வரம்-அயோத்தி, அயோத்தி-ராமேஸ்வரம் ரயில்கள், காசி, அயோத்தி செல்ல வசதியாக புதுக்கோட்டை வழியாக ரயில்கள் நின்று செல்ல அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News November 10, 2024

திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

image

பொன்னமராவதியைச் சேர்ந்த சற்குணம்(32) என்பவருக்கும், காரைக்குடி புதுவயலைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் சுந்தரசோழபுரத்தில் தனது பாட்டி வீட்டில் இருந்த பிரியங்கா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

News November 10, 2024

புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100-ஐ அழைக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News November 9, 2024

மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!

image

பியூசின்னப்பா நகர், கே எல் கே எஸ் நகர், புதுக்கோட்டை நகரில் இன்று இரவு மின்பழுது ஏற்பட்டால் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்ணை 94987 94987 மாவட்டம் மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதன்படி இரவு நேர புகார்களுக்கு என்ற தொலைபேசி எண்ணின் மூலம் பொதுமக்கள் மின்பழுது சம்பந்தமான புகாரை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் மின்பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய கூடாது என கேட்டுக் கொண்டுள்ளனர்

error: Content is protected !!