India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகை மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’29’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், <

ராமேஸ்வரம் – பனாரஸ் வாராந்திர அதிவேக விரைவு ரயில் இனி செவ்வாய்க்கிழமை தோறும் புதுகை ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம் (அதிகாலை 3:33 மணிக்கு வந்து 3:35 மணிக்கு புறப்படும்) நின்று செல்லும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், காரைக்குடிக்கு 2:58க்கு வந்து 3 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் வரும் 9ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை, வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில், பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கம், புதிய அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள், வழங்கப்பட உள்ளன. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அமரடக்கி, ஆவுடையார்கோயில், கொடிகுளம், நாகுடி, வல்லவரி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (ஆகஸ்ட் 7) பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அமரடக்கி, ஆவுடையார்கோயில், கொடிகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டு எண்ணை தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கு உதவும் வகையில், ஷேர் செய்யுங்கள்!

BANK லாக்கரில் நகையை வைக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க! உங்கள் நகை பற்றிய விவரங்கள் வங்கிக்கு தெரியாது. தீ விபத்து, அல்லது திருட்டு போனால் RBI விதிமுறைப்படி காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்படும். லாக்கரை பொறுத்து ஆண்டுக்கு ரூ.1,500 முதல் 12,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி விடுமுறை, அரசு விடுமுறையில் லாக்கரில் நகை எடுக்கவோ வைக்கவோ முடியாது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!

புதுகை மாவட்டம் நாகுடி, கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஆக.7) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்டுமாவடி, மணமேல்குடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோபாலப்பட்டினம், மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி வேலை கனவு நினைவாக போகுது! SBI வங்கியில் 5180 Junior Associates (Customer Support and Sales) பிரிவுகளில் 5180 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். மாத சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். உங்கள் போனில் இருந்தே விண்ணப்பிக்க <

விராலிமலை வட்டாரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் துவரை நாற்று மூலம் நடவு பயிராக சாகுபடி மேற்கொள்ளும் வேளாண் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.7,750 மானியம் வழங்கப்பட உள்ளதாக விராலிமலை உதவி வேளாண் இயக்குனர் பா.மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு காற்று படிப்படியாக வலுப்பெறும் காரணத்தினால் ஆகஸ்ட் 8, 9, 10 ஆகிய மூன்று நாட்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் மற்றும் கடலோர பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.