India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விராலிமலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த கரிகாலன் யுவபிரசாந்த் (21) என்பவர் பழகி தனது வீட்டிற்கு அழைத்து சென்று தாலிகட்டி, பின்னர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் யுவபிரசாந்த் மீது இலுப்பூர் மகளீர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கும் நிலையில் இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதோடு பொதுமக்கள் நோயை தடுக்க ஒத்துழைப்பு நல்குமாறு தெரிவித்துள்ளது.
கறம்பக்குடி,ரெகுநாதபுரம், நெடுவாசல் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (நவ.22) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், கறம்பக்குடி, நரங்கிப்பட்டு, தீத்தான்விடுதி,பிலாவிடுதி, கறம்பவிடுதி, செவ்வாய்பட்டி, தகுளந்திரான்பட்டு, காடாம்பட்டி, , கீராத்தூர், கே.கே.பட்டி, மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை ஒன்றியம், புத்தாம்பூர் ஆதிதிராவிடர் குடியிருப்பிற்கு பட்டா, செம்பாட்டூர் வள்ளிநகர் மக்களுக்கு குடிமனைப் பட்டா, மற்றும் மாவட்டம் முழுவதும் FL 2, மன மகிழ் மன்றங்களுக்கு, அனுமதி மறுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கவி வர்மன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 22ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைதேடும் படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர் காளிதாஸ் குழுவினர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக புதுகை மச்சுவாடி பகுதியில் ஆய்வு செய்யும் போது புதுக்கோட்டை சீமை, ஸ்டேட், சமஸ்தானம், என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும் பழைய பெயர் கலசமங்கலம் அல்லது கலசகாடு என்பதாகும். இந்நிலையில் நகர எல்லைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ‘புதுக்கோட்டை எல்லை கல்’ எழுதப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
புதுக்கோட்டை பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரால் ஒவ்வொரு மாதமும் நுகர்வோர் கூட்டம் நடைபெறும், அவ்வகையில் புதுக்கோட்டையில் மாதந்தோறும் முதல் வியாழக்கிழமை, கீரனூரில் இரண்டாவது வியாழக்கிழமை, அறந்தாங்கி மூன்றாவது வியாழக்கிழமை, திருமயம் நான்காவது வியாழக்கிழமை, ஆலங்குடி மூன்றாவது செவ்வாய்க்கிழமையும் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
இலுப்பூர், கூவாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ். கூலிவேலை செய்துவரும் இவர் அப்பகுதி இடுகாட்டில் நேற்று நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் அரளை கல்லால் தாக்கப்பட்டதில் கனகராஜ் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் இலுப்பூர் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டி பூனையின் தெருவில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. இது குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (20.11.2024) நடைபெற்ற அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
Sorry, no posts matched your criteria.