Pudukkottai

News October 5, 2024

புதுகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யக்கூடியது.பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையின் 04322-222207 மற்றும்1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் ஆட்சியர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.

News October 4, 2024

சாலையோரம் மேய்ந்த மாட்டிற்கு அரிவாள் வெட்டு

image

அறந்தாங்கி அருகே நாகுடியில் நேற்று இரவு சுப்பிரமணியபுரம் சாலைப்பகுதியில் சின்னையா என்பவருடைய மாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் மாட்டின் கால் பகுதியில் வெட்டிவிட்டு தப்பியோடினர். இரத்த காயத்துடன் வீட்டிற்கு வந்த மாட்டை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். புகாரின் பேரில் நாகுடி போலீசார் மாட்டை வெட்டியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News October 4, 2024

புதுகையில் தசரா விழா: மறக்க முடியாத வரலாறு

image

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நடைபெறும் மிகப்பெரும் திருவிழா தசரா ஆகும். இது 1730 ஆம் ஆண்டில் முதல் முறையாக முறையாக கொண்டாடப்பட்டது. 10 நாட்களுக்கு நடைபெறும் இந்த தசரா விழா நகரம் களைகட்டி இருக்கும், யானைபடை, குதிரைப்படை வீரர்கள் வாழலேந்தி வரும் நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது. புதுகை தசரா விழாவை கண்டு வியந்த மைசூர் மன்னரே அங்கு கொண்டாடியதாகக் கூறப்படுகிறது. ஷேர் செய்யவும்

News October 4, 2024

வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆட்சியர் அறிவிப்பு

image

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 09, 10, 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். பொதுமக்கள் தாங்கள் வாக்களித்த வாக்குச்சாவடி மையங்களில் பங்கேற்கலாம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News October 4, 2024

ஒயிட் ஹவுஸ் ஆக மாறும் மாநகராட்சி அலுவலகம்

image

புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தில் முழுவதுமாக (ஒயிட் பெயிண்ட்)வெள்ளை நிறமாக காட்சியளிக்கும் வகையில் வெள்ளை நிற வண்ணம் முழுமையாக பூசும் பணி துவக்கி வைக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் மாநகராட்சி அலுவலகம் முழுவதும் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி போன்று வெள்ளை நிற பூச்சு அடிக்கப்படுகிறது.

News October 4, 2024

புதுகை மாவட்டத்தில் 198.40 மி.மீ மழை

image

புதுகை மாவட்டத்தில் நேற்று 198.40 மி.மீ., மழை பெய்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. புதுகை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. அதிக அளவாக குடுமியான்மலையில் 56 மி.மீ குறைந்த அளவாக ஆதனக்கோட்டையில் 1 மி.மீ மழை பெய்துள்ளது.

News October 4, 2024

வரலாற்று ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்

image

ஆலங்குடி அருகே கீழ கரும்பிரான் கோட்டையை சேர்ந்த ஆசிரியர் சக்திவேல் (40). ஆலங்குடி அரசு பள்ளியில் வரலாற்று ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அப்பள்ளியில் பிளஸ் டூ மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், புதுகை CEO சண்முகம் ஆசிரியர் சக்திவேலை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News October 4, 2024

புதுகை அருகே சாலை விபத்தில் 9 பேர் காயம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்டத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் புதுக்கோட்டை, திருமயம் ,விராலிமலை, பொன்னமராவதி, பகுதியில் புவனேஸ்வரி, விக்னேஷ் ,கணேஷ், மூர்த்தி ,உள்ளிட்ட ஒன்பது பேர் காயம் அடைந்து மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தந்த பகுதி காவல்துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News October 3, 2024

பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிய கலெக்டர்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரங்கத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடுத்தர தொழிலாளருக்கான மானியத்துடன் கூடிய தொழில் கடன் முகாமில் மாவட்ட ஆட்சியர் அருணா, மாவட்ட தொழில் கடன் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

News October 3, 2024

நார்த்தாமலை அருகே தம்பதி உயிரிழப்பு

image

நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைபட்டி பேருந்து நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி பேருந்து மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த கீரனூர் போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!