India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நார்த்தாமலை அருகே பொம்மாடிமலையில் தகட்டு கல் கடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் அங்கு நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அப்போது, இரண்டு யூனிட் கல் (தகடுகள் ) கண்டுபிடித்தனர். இது தொடர்பாக இளவரசன் (42), முத்து (38), ஐயப்பன் (27), சின்னதுரை (24), ஆகிய 4-பேரையும் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
புதுக்கோட்டை நகராட்சி 120 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த நகராட்சியில் தற்போது 11 ஊராட்சிகளை இணைத்து 70 வார்டு கொண்ட மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று மேயராக திலகவதி செந்தில், துணைமேயராக லியாகத் அலி பதவி ஏற்கின்றனர். இதில் அமைச்சர்கள் நேரு, ரகுபதி, மெய்யநாதன் கலந்து கொள்கின்றனர். இது ஒரு வரலாற்றுச் சாதனையாக கருதப்படுகிறது.
அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் தனது 55வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவர் 9.10.69 ஆண்டு மறமடக்கியில் பிறந்தார். 2016ஆம் ஆண்டு முதல் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். 2021முதல் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் தற்பொழுது பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளராக இருப்பது மட்டுமல்லாது தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கிறார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்துள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, 10ஆம் வகுப்பில் தோல்வி பெற்றவர்களுக்கு மாதம் 200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300, பட்டதாரிகளுக்கு மாதம் 600 வீதம் 3 ஆண்டுக்கு பெற புதுக்கோட்டை ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்
புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை காலை 9 மணியிலிருந்து 2 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விருப்பமுள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
17ஆம் நூற்றாண்டில் மன்னர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் பெயரில் அக்காலத்தில் “அளவைகள்” இருந்தன புதுக்கோட்டையில் புதுக்கோட்டை படி சின்ன படி ,பெரிய படி, பல்லவன் படி, ஆகிய ஆகியவையும் தஞ்சை ஆட்சியாளராக இருந்த ஹாரிஸ் என்பவரது நினைவாக ஹாரிஸ் படி என்ற அளவையும் புழக்கத்தில் இருந்தன.
பிற்காலத்தில் அதுவே ஒரு படி, அரைப்படி, கால் படி, வீசம், என மாறியது. Way 2 News காலச்சுவடு தொடரும். ஷேர் செய்யவும்
வரலாற்றிலேயே புதுக்கோட்டையில் இருந்து தூத்துக்குடிக்கு முதல் நேரடி சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து விடப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டையில் புதன்கிழமை காலை 9:00 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு மதியம் 1.50 மணியளவில் சென்றடையும் பிறகு தூத்துக்குடியிலிருந்து மாலை 4.15 மணி அளவில் புறப்பட்டு புதுக்கோட்டைக்கு 9 மணியளவில் வந்தடையும். இது ஆயுத பூஜைக்காக ஒரு நாள் விடப்பட்ட சிறப்பு ரயிலாகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது. புத்தக ஆர்வலர்கள் தங்களது விவரங்களை மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட நூலக ஆணைக்குழு, மேல 4-ம் வீதி, புதுக்கோட்டை என்ற முகவரியில் வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
திருவரங்குளம், அழகம்மாள் புரத்தை சேர்ந்தவர் செல்வி (40) இவரது மகன் வைத்தீஸ்வரன் (20), திருமணம் ஆகாத நிலையில் மன உளைச்சல் இருந்துள்ளார். நேற்று மாலை 4 மணிக்கு மேல் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. தாய் கொடுத்த புகார் பேரில் வல்லத்திராக்கோட்டை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வரும் 9ஆம் தேதி புதன்கிழமை மற்றும் 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களில் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் நடைபெற உள்ளது. எனவே மாணவர்கள் பங்கு பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அருணா தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.