India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023-2024 ஆம் ஆண்டில் மின் மோட்டார் உடன் கூடிய தைலி இயந்திரம் ரூ.35.33 லட்சம் மதிப்பீட்டில் 283 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் கீரனூரில் அரசினர் தொழிற்பயிற்சி 2024 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கீரனூரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 31.12.2024 வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தேசிய கால்நடை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆறாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி டிசம்பர் 16ஆம் தேதி முதல் தொடங்கி ஜன.20ஆம் தேதி வரை அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது. கால்நடை வளர்ப்பு முகாம் நடைபெறும் இடத்திற்கு தங்கள் கால்நடைகளை தவறாமல் கொண்டு சென்று தடுப்பூசி போட்டு பயன்பெற மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
புதுகையில் நாளை (டிச.14) ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெறுகிறது. இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு 044 28888060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் காலை 6:30 முதல் மதியம் 2 மணி நிலவரப்படி நேரத்தில் 515.20 மி.மீ மழை பெய்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று அதிகாலை முதல் அங்கு நல்ல மழை பெய்து வருவதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களுக்கு 1077 மற்றும் 04322-222207 என்ற எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் இன்று (டிச.12) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ராஜகோபாலபுரம், பூங்கா நகர், சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், கவிநாடு, பெருமாநாடு, திருவரங்குளம், நச்சாந்துபட்டி, நமண சமுத்திரம், கடையக்குடி, லெணாவிளக்கு, பெருஞ்சுனை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜி.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (டிச.12) அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா சற்று முன் அறிவித்துள்ளார். தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அநேக இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஷேர் செய்யவும்
புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் வடகிழக்கு பரவ மழை முன்னிட்டு செயல்பட்டு வரும் மழைக்கால அவசர கட்டுப்பாட்டு அறையில் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுந்தரவல்லி மற்றும் மாவட்ட ஆட்சி அருணா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Sorry, no posts matched your criteria.