India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெருஞ்சுனை-யை சேர்ந்த அஞ்சலிதேவி தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று மாலை 7:30 மணி அளவில் புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியே வந்து கொண்டிருந்தார். அடையாளம் தெரியாத டிப்பர் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டவர் பலத்த காயம் அடைந்தார் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாளை (ஜன.2) மாலை 3.30 மணி அளவில் நடைபெற உள்ளது என காங்., தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி தபால் நிலையத்தில் பொதுமக்களிடம் பல லட்சம் கையாடல் செய்த அஞ்சலக அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர கோரி வலையபட்டி தபால் நிலையம் முன்பு நாளை (2-1-2025)காலை 11 மணிக்கு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
புதுகை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டங்கள் புதுகை செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் முதல் வியாழக்கிழமையும், கீரனூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 3 வது வியாழக்கிழமையும், திருமயம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 4 வது வியாழக்கிழமையும், ஆலங்குடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் 3 வது செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் என மேற்பார்வை பொறியாளர் த.அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய மின் பகிர்மான வட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (02.01.25) நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறையை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டைசின்ன பூங்கா எதிரே நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை புதுக்கோட்டை காவல் துறையினர் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் இப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த வந்திதா பாண்டே திண்டுக்கல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுகை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அபிஷேக்குப்தா விரைவில் பதவியேற்க உள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் புதுக்கோட்டையில் சைக்கிள் போட்டி வருகின்ற 4ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாணவ மாணவிகள் 13,15,17 பிரிவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் போட்டியில் பங்கு பெற புதுக்கோட்டை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டை திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பாலன் நகர் ரயில்வே கேட் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ள ரயில்வே துறை சார்பில் லித்தோ பேனர் வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குருப் 2 மற்றும் 2A தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட இருப்பதாகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்பட இருப்பதாகவும் பயிற்சி பெற விரும்புவோர் மேலாளர் அலுவலகம் தாட்கோ புதுக்கோட்டை என்ற முகவரியிலும் 04322-221487 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.