India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அறந்தாங்கி சன்னதி வயலில் ஒரு சிலர் சீட்டாட்டம் விளையாடுவதாக அறந்தாங்கி காவல் ஆய்வாளர் சூரிய பிரகாஸ்-க்கு தகவல் கிடைத்தது. நேற்று மாலை அங்கு சென்ற போலீசார் விநாயகர் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாடிய பன்னீர்செல்வம், ஜான் பாண்டியன், சாதிக் பாஷா, கமலதாஸ், ஷர்புதீன், ஆகியோரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
சீனாவில் அதிகம் பரவிவரும் HMPV வைரஸ் தமிழ்நாட்டிலும் இருவருக்கு உறுதியாகி உள்ளது. தமிழக அரசு உடனடியாக முறையான வழிகாட்டு நெறிமுறைகள் முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டுகிறது. பொங்கல் பண்டிகை வர உள்ளதால் மக்கள் அதிகம் கூடும் வாய்ப்பு இருப்பதால் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுத்தலின்படி வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்த பணிகள் கடந்த ஆண்டில் நடைபெற்று வந்தன. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்த மேற்கொள்ள வாக்காளர்கள் விண்ணப்பித்து வந்தனர். மேலும் சிறப்பு முகாம்களும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு கலெக்டர் அருணா கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடுகிறார்.
மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று பொங்கல் தொகுப்பு பெற டோக்கன் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இன்று ஒரே நாளில் 1,07,350 டோக்கன் வழங்கப்பட்டது. கூட்டுறவுத்துறை மூலமாக வழங்கப்படும் இந்த பணி வரும் 8ம் தேதி மாலை 6 மணி வரை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 9ம் தேதி முதல் பொங்கல் தொப்பு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நாளை ஜன.06 காலை 10.00 மணிக்கு மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள், பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுகை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். www.jallikattu.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய காப்பீடு திட்டம் பெற்று அதனை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசு டோக்கன்கள் ரேசன் கடை ஊழியர்கள் மூலமாக இன்று காலை முதல் வீடு வீடாக கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் பொங்கல் டோக்கன்களை வாங்கி மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாட மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக இளைஞர் திறன் திருவிழா தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் புதுகை ராணியார் அரசு மகளிர் பள்ளியில் நாளை 9:00-3:00 மணி வரை நடைபெறுகிறது.18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண் பெண் கலந்து கொண்டு இலவச பயிற்சி பெற ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் அஞ்சலக அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ராஜேஷ் என்பவர் பொதுமக்கள் சேமிப்பு கணக்கில் செலுத்தும் பணத்தை வரவு வைக்காமல் 40 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் அளித்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அஞ்சல் அதிகாரி ஷாலினி தகவல் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் 3:30 மணி அளவில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கரூர் MP ஜோதிமணி, திருச்சி MP துரை வைகோ, ராமநாதபுரம் MP நவாஸ் கனி, சிவகங்கை MP கார்த்தி சிதம்பரம், திமுகவின் MP MM அப்துல்லா உள்ளிட்ட பாராளுமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.