India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மீதான விசாரணை புதுகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி (பொறுப்பு) வசந்தி முன்னிலையில் வந்தது. வழக்கின் விசாரணைக்கு விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகவில்லை. இதனால், இவ்வழக்கின் விசாரணையை செப்.29ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.
இந்திய தபால் துறையில் அனைத்து தபால்நிலைய சேமிப்பு கணக்குகளுக்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, தபால் நிலைய வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தில், ஆதார் மற்றும் கணக்கு விவரங்களை எடுத்து சென்று ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம். இந்த இணைப்பு மூலம், அரசு மானியங்கள் சலுகைகளை பெறலாம் என புதுகை தபால் நிலைய கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை (30.08.24) நடைபெறவுள்ளது. அதன்படி வளவம்பட்டி, கல்புடையான்பட்டி, சோச்சிப்பாளை, கல்லுக்காரன்பட்டி, வன்னாரப்பட்டி தொண்டைமான் ஊரணி ஆகிய பகுதிகளுக்கு, ஆதனக்கோட்டை தனியார் மஹாலிலும், கந்தர்வக்கோட்டை, வெள்ளாளவிடுதி, மங்களா கோவில் சமுதாயக் கூடத்திலும், பொன்னமராவதி, காரையூர், தனியார் மண்டபத்திலும் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
வயலோகம் அரசு பள்ளியில் படித்த ஐந்து மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளனர். அவர்களை தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை எம்எல்ஏவுமான சி. விஜயபாஸ்கர் நாளை நேரில் சென்று பாராட்ட உள்ளார். இதில் அப்பகுதி பெரியோர்கள், பொதுமக்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் வகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக அப்பகுதி பொதுமக்கள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
புதுக்கோட்டை ஆட்சியரக கூட்டரங்கில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை/ பிற மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மருத்துவமனைகளில் பாதுகாப்பு அம்சம், காவல் துறை ரோந்துக் பணி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் எவ்வாறு தடுப்பது போன்றவை ஆலோசிக்கப்பட்டன.
வடவாளம் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, மாவட்ட தொழில் மையம் சார்பில், பயனாளிக்கு பயணிகள் ஆட்டோவினை வழங்கினார். மேலும் இதில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கலந்து கொண்டனர்.
வயலோக பள்ளியில் நடந்த கலை திருவிழாவில் சினிமா பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் பிரபலமான வயலோகம் அரசுப்பள்ளி மாணவி ஆர்த்தி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5% இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவப் படிப்புக்கு தேர்வாகியுள்ளார். நடனமாடும் வீடியோ வைரலானதை தொடர்ந்து ‘படிக்கும் வயதில் இதெல்லாம் தேவையா’ என பலரும் விமர்சித்த நிலையில், இன்று மருத்துவ மருத்துவப் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய நில கரையோரத்தில் நடவு செய்வதற்கு இலவசமாக வழங்கப்படும் தேக்கு, மாங்கனி, வேப்பம், புங்கை, வாகை, வேங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் புதுக்கோட்டை மச்சுவாடி வனத்துறை அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பராமரித்து வருகின்றனர். அவ்வப்போது விவசாயிகள் வந்து மரக்கன்றுகளை பெற்று செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தன்னவாசல் எதிரே உள்ள மலையடி பள்ளத்தில் இன்று காலை (60) வயது மதிக்கதக்க ஒரு ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் போலீசார், தீயணைப்புதுறை உதவியுடன் சடலத்தை மீட்டனர். பின்னர், இறந்தவர் யார், எந்த ஊர், தண்ணீரில் மூழ்கி இறந்தாரா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்காக அந்தந்த பகுதி பாக அலுவலர்கள் வீடு வீடாக அக்.18ஆம் தேதி வரை வருவார்கள். அதைத் தொடர்ந்து அக்.29 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் உள்ள திருத்தங்கள் தொடர்பாக வாக்காளர்கள் உரிய படிவங்கள் மூலம் நவ.24 வரை விண்ணப்பிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.