India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விடுமுறை தொடங்கிய நிலையில் மக்கள் பல்வேறு இடங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். அதன்படி தற்போது புதுகை மட்டும் இருக்கும் சூப்பர் பிளேஸ் (பொழுதுபோக்கு இடங்கள்) 1.சித்தன்னவாசல், 2.மலையடிபட்டி குகைகோயில், 3.புதுகை அருங்காட்சியம், 4.நார்த்தாமலை குடவரை கோயில், 5.திருமயம் கோட்டை போன்ற இடங்கள் மாவட்டத்தில் இருக்கிறது. குட்டிஸ், குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அனைவருக்கும் Share பண்ணுங்க..
திருமயம் மையப்பகுதியில் உள்ள மலையை சுற்றி ஒரு கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேதுபதி விஜயரகுநாத தேவர் எனும் கிழவன் சேதுபதி மன்னரால் 1676ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த கோட்டையில் மலையை குடைந்து குடைவரை கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சிவன், விஷ்ணு சன்னிதிகள் ஒரே இடத்தில் இருக்கின்றன. இங்கு சென்று வழிபட்டால் பாவம் நீங்கும் என்கின்றனர். SHARE பண்ணுங்க..
புதுக்கோட்டை அடுத்த குறிச்சியில் அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை அம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள அம்மன் நவபாஷானத்தால் ஆன மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக அரசமரத்தின் கீழே அருள்பாலிக்கும் விநாயகர் இங்கு ருத்திராட்ச மரத்தின் அடியில் உள்ளார். இங்குள்ள அம்மனை வழிபட்டால் முப்பெரும் தேவியரை தனித்தனியே வழிபட்ட பலன் கிடைக்குமாம். மேலும் தீராத நோய்கள் தீரும் என்று கூறுகிறார்கள். இந்த தகவலை பகிரவும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (30.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது நார்த்தாமலை சுனை லிங்கம் உள்ளிட்ட இந்த மலையில், பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. இங்கு மேலமலைப் பகுதியில் இருக்கும் விஜயாலய சோழீச்சுரம் கோயிலுக்குக் கீழ் ஒரு சுனை உள்ளது. அந்தச் சுனையினுள் ஒரு லிங்கம் இருப்பதாகவும், இதற்கு முன் அந்த லிங்கத்தை 1872ஆம் ஆண்டு, மக்கள் வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் குலதெய்வமாக விளங்குபவள் அன்னை பிரகதாம்பாள். திருகோகர்ணத்தில் உள்ள அன்னையின் தலத்திற்கு சென்று வழிபடாமல் அரச குடும்பத்தினர் எந்த காரியத்திலும் ஈடுபடமாட்டார்கள். இந்த அம்மன் அரைக்காசு அம்மன் எனவும் அழைக்கப்படுகிறாள். தமிழ்நாட்டில் வேறெங்கும் அரைக்காசு அம்மனுக்கு தனிக்கோயில் கிடையாது. மேலும் இங்கு வேண்டினால் தொலைந்த பொருட்களை மீட்டு தருவாள் என்பது நம்பிக்கை. SHARE பண்ணுங்க.
ஆவுடையார்கோவில் ஒன்றியம் வேல்வரை நடுநிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் முருகன். இவரது கல்வி சேவையை பாராட்டி திண்டுக்கல்லில் உள்ள லீலா கலை மற்றும் விளையாட்டு குழுமத்தின் சார்பில் கல்வி சுடர் விருது நேற்று வழங்கப்பட்டது. விருது ஆசிரியர் சேவையை பாராட்டி மாநில அளவில் ஜேஆர்சி மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் பரிந்துரையின் பெயரில் வழங்கப்பட்டது.
விராலிமலை ஊராட்சி ஒன்றியம், இராஜகிரி ஊராட்சி, கல்லுக்குத்தாம்பட்டியில், உலக தண்ணீர் தினத்தையொட்டி நேற்று (29.03.2025) நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா கலந்துகொண்டு உரையாற்றினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் அவர்கள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சா.மோகனசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.