India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணமேல்குடி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் புதன்கிழமையன்று காலை 08.45 மணியளவில் களஆய்வு மேற்கொள்ள உள்ளார். மனமேல்குடி பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.
பாலவாக்கம் பெரியார் ரோடு பசும்பொன் தேவர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் ஆலங்குடி அருகே வடக்கு அரையப்பட்டி கிராமத்தில் உள்ள தனது மகள் கனகலெட்சுமி வீட்டிற்கு வந்தார். அப்போது மகள் வீட்டின் மாடியில் விநாயகர் சிலை வைத்து பூஜைநடை பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து செல்வராஜ்வீட்டின் மாடியில் விநாயகரை தரிசித்துவிட்டு இறங்கி வந்தபோது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்துவிட்டார்.
புதுக்கோட்டை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் இருபதுக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் ஐடிஐ டிப்ளமோ போன்ற கல்வித் தகுதி உடைய 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தங்களது சுய விவரங்களுடன் கலந்து கொள்ளலாம்.
கீரனூர் அருகே அடைஞ்சன்குளம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சசிகுமார், சதீஷ்குமார், ராஜ்குமார், ஆனந்தகுமார், நடராஜன், பாலமுருகன், அழகர்சாமி, லட்சுமணன், சிங்காரவேல், நடராஜன், வீரமுத்து ஆகியோர் கைது செய்தனர். வீராச்சாமி என்பவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார், மற்ற 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதில் 90 ஆயிரம் ரொக்கம், 9 பைக்கு, 13 செல்போன் ஆகிய பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து, அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்காக வருகிற 23-ந் தேதி தொழிற்பழகுனர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் புதுக்கோட் டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. தொழிற் பழகுனர் பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் சான்றி தழும் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை கலெக்டர் அருணா வெளியிட்டார்.
நாம் தமிழர் கட்சியினுடைய தலைவர் திரு சீமான் காலையில் புதுக்கோட்டை நகரில் தனியார் மஹாலில் நடக்க இருக்கக்கூடிய கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பின் அரிமளத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் “ஏன் வெல்ல வேண்டும் நாம் தமிழர்” எனும் தலைப்பில் தலைமை உரையாற்றுகிறார்.
விராச்சிலை வடக்கு வேளாளர் தெருவை சேர்ந்த சத்தியா வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை, திருநல்லூர் தெற்கு தெரு சித்ரா, ஜவுளி கடையில் பகுதி நேரமாக பணி செய்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை, திருவள்ளுவர் நகர் பாலசுப்ரமணியன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் வெளியே செல்வர் வீடு திரும்பவில்லை. அவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அறிஞர் அண்ணாவின் 116-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறந்தாங்கி அதிமுக சார்பில் நகர செயலாளர் ஆதி மோகனகுமார் தலைமையில் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்ட நிகழ்வில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை பிசாந்து பகுதி கார்த்தி, குழந்தை இல்லாததால் வீட்டில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி இறந்தார். புதுகை பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடந்தார், இது குறித்து விஏஓ சதீஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர காவல் துறை விசாரணை, புலியூர் ரமேஷ் மனைவி சரஸ்வதி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு மரணம் அடைந்தார்.
சென்னையில் நேற்று புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய மாநில அமைச்சர் திருநாவுக்கரசர் மகன் வரவேற்பு நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கொண்டு சிறப்பித்தனர்.
Sorry, no posts matched your criteria.