Pudukkottai

News October 1, 2025

புதுக்கோட்டை: கணவன் வீசம் அருந்தி தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அடுத்த திருமணஞ்சேரி மயிலாடுதுறை சேர்ந்தவர் காளிமுத்து (39). இவர் அவரது மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மது போதையில் மயிலாடி தெருவில் உள்ள அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி வேம்பாயி (31) அளித்த புகாரியில் கரம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 1, 2025

புதுக்கோட்டை பென்சன், உரிமை தொகை வரலையா?

image

புதுக்கோட்டை மக்களே சாதி சான்று , பட்டா மாற்றம், பென்சன், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தம், ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய“ போன்ற சேவைகளுக்கு தமிழக அரசின் சூப்பர் திட்டம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 03.10.2025 ஆம் தேதி புதுகையில் நடைபெறும் இடங்களை <>கிளிக் <<>>செய்து தெரிஞ்சிக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News October 1, 2025

புதுக்கோட்டை: மின் கம்பியாள் உதவியாளர் தகுதி தேர்வு

image

புதுகை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளர்களிடமிருந்து இத்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது‌. http://skilltraining.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அரசினர் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்திற்கு 17.10.2025க்குள் அனுப்ப ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

News October 1, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (செப்.30) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News September 30, 2025

புதுக்கோட்டை: ரூ.40,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

புதுகை மக்களே! மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள பெண் செவிலியர், விடுதி காப்பாளர், கணக்காளர், இளநிலை செயலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் போன்ற பல்வேறு பணிகள் நிரப்பப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 23.10.2025 தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 30, 2025

புதுகை: வெளிநாடு சென்று படிக்க உதவித்தொகை

image

புதுகை மாவட்டத்தில் முஸ்லிம் மாணவ, மாணவியர் உயர் தர உலகளாவிய கல்வி வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 மாணவர்களுக்கு, ஒரு மாணவருக்கு ₹36 லட்சம் வீதம் 10 மாணவருக்கு ₹3.6 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. இதற்கு www.bcmbcmw.gov.in யில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, 31.10.2025குள் ஆணையர் சிறுபான்மை நலத்துறை, 1 தளம், சேப்பாக்கம் சென்னை என்ற முகவரியில் அனுப்பலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News September 30, 2025

புதுகை: சமையல் எண்ணெய் சிதறி பரிதாப பலி

image

கந்தர்வகோட்டை அடுத்த ஆதனூரை சேர்ந்தவர் மதியழகன் (52). இவர் நேற்று அவரது வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த போது துரதிஷ்டவசமாக சூடான சமையல் எண்ணெய் அவர் உடலில் சிந்திய நிலையில் அவருக்கு 60% தீக்காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் பிரகாஷ் (27) அளித்த புகாரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 30, 2025

புதுகை: வெளியூர் செல்லும் மக்கள் கவனத்திற்கு!

image

புதுகை மக்களே, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறை முடிந்து வெளி ஊர்களுக்கு பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? அப்போ, இந்த தகவல் உங்களுக்கு தான்! விடுமுறை நாட்கள் முடிந்து வெளியூர் திரும்பும் போது, பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் ‘1800 599 1500’ என்ற எண்ணில் எளிதாக புகாரளிக்கலாம். கட்டண விவரங்களை தெரிந்து கொள்ள <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். SHARE பண்ணுங்க!

News September 30, 2025

புதுகை: சரக்கு வாகனம் மோதி துடிதுடித்து பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் கூகனூர் பகுதியில் நாகுடில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவம் அறிந்த நாகுடி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் முதற்கட்டமாக இவர் அரியமாக்காடு பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

News September 30, 2025

புதுகை மாவட்டத்தில் அரசு வேலை; கடைசி வாய்ப்பு!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், புதுகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், இன்றுக்குள் (செப்.30) இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே<> க்ளிக்<<>> செய்யவும். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!