India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த விராலிமலையே சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த வழக்கில், ஸ்ரீரங்கம் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நவீன், விஜய், 17 வயதான 2 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். விசாரணையில், 5 பேரும் சேர்ந்து தான் மதுபோதையில் ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கினோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன். இவர் திருச்சி பெரியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று ஸ்ரீரங்கம் காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்றுள்ளார். அப்போது, ஸ்ரீரங்கம் கீதாபுரம் பகுதியில் உள்ள இளைஞர்களுடன் ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்தார். பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஞ்சித் பரிதாபமாக இன்று உயிரிழந்தார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ,1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்திற்கான சிறப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. 28 இடங்களில் நடந்த முகாமில் 900 மாணவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இதில், 250 பேருக்கு புதிதாக வங்கி கணக்கு புதுப்பிக்கப்பட்டது.

அறந்தாங்கி அடுத்த மறமடக்கி ஊராட்சியில் பொதுமக்களின் மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆற்றங்கரை பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியின் செயல்பாட்டை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மின்சார துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 78வது சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகேசன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜெயசித்ரா(49) மாரடைப்பால் உயிரிழந்தார். அயனாபுரத்தில் உள்ள வீட்டில் தனது அக்காவிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வாந்தி எடுத்து மயக்கமடைந்தார் . மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறை அதிகாரி ஜெயசித்ராவின் சொந்த ஊர் புதுக்கோட்டை ஆகும்

கந்தர்வகோட்டை அருகே பெரியகோட்டையை சேர்ந்தவர் சசிகலா ஊராட்சி தலைவராக உள்ளார். இவரது கணவர் முருகேசன் கத்தார் நாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 24ம் தேதி அங்கு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர சசிகலா முயற்சி மேற்கொண்டார். இந்நிலையில், திருச்சி எம்பி துரை வைகோ தூதரகத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மறமடக்கி ஊராட்சி பொதுமக்களின் மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மோக்குளக்கரை மற்றும் ஆற்றங்கரை பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட இரண்டு மின்மாற்றிகளின் செயல்பாடு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழாவில். தாய்ப்பால் முக்கியத்துவம் பற்றி மக்களின் அறியாமையை போக்கி சமுதாயத்தில் விழிப்புணர்வை உண்டாக்கும் பொருட்டு வருடம் தோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தை உலக தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படுகின்றன. இதனை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை, மிட்டவுன் ,மகாராணி ரோட்டரி சங்கம் இணைந்து உலக தாய்ப்பால் விழா கொண்டாடினர்.

புதுக்கோட்டை உட்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.