Pudukkottai

News October 5, 2025

புதுக்கோட்டை: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News October 5, 2025

புதுக்கோட்டை: கடன் பிரச்னை நீக்கும் அற்புத கோயில்!

image

புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற சாந்தநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சாந்தநாதரை தரிசித்தால் முன்வினை பாவம், திருமணத்தடை, கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி காசி, ராமேஸ்வரம் யாத்திரை சென்ற புண்ணியபலன்கள் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

News October 5, 2025

புதுகை மக்களே… இலவச அரிசி, கோதுமை பெற APPLY..!

image

நாகை மக்களே மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்.. அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க.. SHARE பண்ணுங்க.

News October 5, 2025

புதுகை: சிறுமி உட்பட 6 பேரை குதறிய வெறிநாய்

image

தமிழகலத்தில் பல்வேறு இடங்களில் வெறிநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நேற்று வெறிநாய் கடித்து ஒரு சிறுமி, 3 பெண்கள், 2 முதியவர்கள் என 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News October 5, 2025

இலுப்பூர் அருகே பாம்பு கடித்து இளைஞர் உயிரிழப்பு

image

இலுப்பூர் அடுத்த கீழ சித்தகுடிப்பட்டியை சேர்ந்தவர் வீரமூர்த்தி(25). இவர் விராலிமலையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்.2ம் தேதி வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரைப் பாம்பு கடித்தது. பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின்படி இலுப்பூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News October 5, 2025

புதுகை மக்களே.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

image

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE .
6. பயிற்சி முடித்த பின் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியவும், கை நிறைய சம்பாதிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.. ஷேர் பண்ணுங்க

News October 5, 2025

புதுகை: பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு

image

புதுகை மாவட்டத்தில் உலகப் பொதுமறையான திருக்குறள் ஒப்புவிக்க்கும் போட்டிக்கு 2025-26 ஆம் ஆண்டில் பள்ளி பயிலும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில்,1330 குறட்பாகங்களை முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும். வெற்றி பெற்றவருக்கு ரூ.15,000 ரொக்க பரிசு வழங்கப்படும். இதற்கு <>tamilvalarchithrai <<>>என்ற இணையதளத்தில் நவ.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News October 5, 2025

புதுகை: இறக்கும் வரை கடமை தவறாத பெண் SI

image

புதுகையில் நேற்று மின்சராம் தாக்கி SI லட்சுமி பிரியா உயிரிழந்த சம்வவம் பெரும் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக நேற்று அதிகாலை SIலட்சுமி பிரியாவுக்கு, கட்டுமாவடி தோப்பு பகுதியில் மது விற்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் நடத்திய சோதனையில், 650 மது பாட்டில்களுடன் மதுவிற்ற ரவிச்சந்திரன் மாதவன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளார். இறக்கும் வரை கடமை தவறாத SI இருந்துள்ளார்.

News October 5, 2025

முதல்வர் தலையிட வேண்டும்; சிஐடியு மாநிலத் தலைவர்

image

புதுக்கோட்டை அரசு போக்குவரத்து ஊழியர்கள் 48-வது நாளாக நடத்தும் போராட்டத்தில் நேற்று (அக் 4) சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் உடனடி தலையீடு செய்ய வேண்டும் எனக் கோரினார். ஓய்வுபெற்றோருக்கு நிலுவை பணப்பயன்கள் வழங்காதது, தீபாவளி போனஸ் அறிவிக்காதது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அவர் கண்டனம் தெரிவித்தார்.

News October 5, 2025

புதுகை: சிறுவன் கீழே விழுந்து பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த ராஜகிரியை சேர்ந்தவர் மாரிமுத்து என்பரின் மகன் அருள்(7), நேற்று ராஜகிரியில் SOC-யில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரில் விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!