Pudukkottai

News January 5, 2026

புதுகை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 5, 2026

புதுகை: பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த தோப்புவயல் டாஸ்மாக் கடை அருகே, நேற்று முகமது நசீம் (35) பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த வினோத் காந்தி (32) மோதியதில் முகமது நசீமிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி யாஸ்மின் (30) அளித்த புகாரில் மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 5, 2026

புதுக்கோட்டை: தவறி விழுந்து துடிதுடித்து பலி!

image

திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு நேற்று வீரையா என்பவர் ஓட்டி சென்ற பைக்கில் பின்னால் அமர்ந்து சுப்பிரமணியன் (38) சென்றுள்ளார். அப்போது அன்னவாசல் பேயல் குளத்தினருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து தலையில் படுகாயமடைந்து சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி பாண்டி மீனா (30) அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த அன்னவாசல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 5, 2026

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.,4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News January 4, 2026

புதுக்கோட்டை: திருமணத் தடைகள் போக்கும் கோயில்!

image

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இறைவன் சுகந்த பரிமளேஸ்வரர், இறைவி பெரிய நாயகி காட்சி தருகின்றனர். திருமணநாதர் என்ற பெயரும் சுகந்த பரிமளேஸ்வரருக்கு உண்டு. எனவே திருமணத்தடைகள் ஏற்படுவோர் இக்கோயிலில் பரிமளேஸ்வரை தரிசனம் செய்தால் திருமணம் கைக்கூடும் என்பது நம்பிக்கை. இதனை மற்றவர்களும் தெரிந்துக்கொள்ள SHARE பண்ணுங்க!

News January 4, 2026

புதுக்கோட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

புதுக்கோட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News January 4, 2026

BREAKING புதுக்கோட்டை: இளைஞர் துடிதுடித்து பலி

image

அறந்தாங்கி அடுத்த விச்சூர் அருகில் உள்ள ஒட்டாங்கரை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சுமன் (22). இவர் இன்று காலை தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய போது தாழ்வாக சென்ற உயர் மின்னழுத்த கம்பியை, கேட்ச் பிடிக்க சென்ற போது பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News January 4, 2026

புதுகை: 12th தகுதி.. ரயில்வே வேலை ரெடி!

image

புதுகை மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு குறைந்தது 18 வயது நிரம்பிய, 12வது படித்தவர்கள்<> இங்கு கிளிக் <<>>செய்து, வரும் ஜன.29-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். இந்த நல்ல தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!