India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெற்கு குலமங்கலம், கருவன்பட்டி, ரங்கையா மகன் சசிகுமார் 43, நேற்று காலை 6:00 மணிக்கு குடிபோதையில் பெருங்கரையடி மீண்ட அய்யனார் குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்பொழுது நிலை தடுமாறி நீரில் மூழ்கி இறந்து விட்டார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் காலை 10:30 மணிக்கு மீட்டனர். அவர் உடல் அறந்தாங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து குலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அருகில் இயங்கி வரும் புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மாவட்ட ஆட்சியர் அருணா இன்று(அக்.03) வியாழக்கிழமையன்று காலை 10.00 மணியளவில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் அரசியல் பொதுமறைகளும் அரசு அதிகாரிகள் பங்கு பெறுவார்கள்.
அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவையின் சார்பில் 21ஆம் ஆண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு செயல்திறன் போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காந்திஜெயந்தி முன்னிட்டு பரிசு வழங்கும் நிகழ்வு புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற்றது. ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷனா பாட்டு போட்டியில் மாவட்ட அளவில் 3ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபட்டினம் ஊராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் 7 ஊராட்சிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தை அம்மாபட்டினம் பொதுமக்கள் புறக்கணித்து விட்டனர்.
ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், சிறுமருதூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (02.10.2024) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான சமூக தீமை நிராகரிப்புஉறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊதியப்பட்டியல் மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கி பயன்பெறலாம் என ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். புதுகை மாவட்டத்தில் தொழில் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு சிறப்பான சேவையை தமிழக அரசு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று 497 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதனால், 499 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆய்வாளர்கள் 20 பேர், உதவி ஆய்வாளர்கள் 123 பேர், ஆண் காவலர்கள் 196, பெண் காவலர்கள் 160 என மொத்தம் 499 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவுடையார் கோவில் ஆத்மநாதர் சிவபெருமான் ஆலயத்தில் “அருவ” வழிபாடு நடப்பது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. உருவ வழிபாடு இல்லை மூலஸ்தானத்தில் எவ்வித சிலையும் கிடையாது. இங்கு கொடிமரம் இல்லை, பலிபீடம் இல்லை, நந்தி இல்லை மற்ற கோயில்களை போன்று போல் தீபாராதனையை பக்தர்கள் தொட்டு வணங்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுகை கீரனூர் அருகே 12 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டிய சோழர்கள், பாண்டியர்கள் விஜயநகரர்களிடமிருந்து கோவிலுக்கு நன்கொடை கிடைத்தது. இக்கோயிலில் கல்வெட்டுகள் இராஜராஜன் குலோத்துங்க சோழன்-III விஜயநகரர்களுக்கு சொந்தமானது. கல்வெட்டின்படி சிவபெருமான் உத்தமதனிச்சுரமுடைய நாயனார் என்று அழைக்கப்பட்டார். இக்கோயில் தேவஸ்தானம் மற்றும் இந்திய தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆவுடையார் கோவில், இடையன்காடு, செல்வராணி மகள் வினிதா (21), கல்லேந்தல் அரசு கலைக்கல்லூரியில் பி. ஏ தமிழ் பிரிவு படித்து வந்தார். தாயிடம் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக எலி பேஸ்ட் தின்று வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். பின்னர், அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.