Pudukkottai

News August 21, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் நாளை கண்காணிப்பு குழு கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டு துறை ரீதியாக மாவட்ட வளர்ச்சி குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்க உள்ளனர்.

News August 21, 2024

அரசு பள்ளியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த மாணவர்கள்

image

திருவரங்குளம் அடுத்த கோவில்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறையுடன் கூடிய புதிய கட்டிடத்தை திறந்து வைக்க அமைச்சர் மெய்யநாதன் இன்று வருகை புரிந்தார். அப்போது நிகழ்ச்சியில் தன்னை ஆரத்தி எடுத்து வரவேற்ற மாணவர்களை அழைத்து திறந்து வைக்குமாறு கூறினார். பொதுமக்கள் மத்தியில் இந்த செயல் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது.

News August 21, 2024

நடிகர் பிரபுவை சந்தித்த புதுக்கோட்டை முன்னாள் எம்.பி.

image

சென்னையில் நடிகர் பிரபுவை புதுக்கோட்டை முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்தார். அப்போது தன்னுடைய மகன் இல்ல திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். மேலும் பிரபு வருவதாக உறுதியளித்தார்.

News August 21, 2024

புதுகை வந்த விதை நெல்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, பொன்னமராவதி, கீரனூர், திருமயம், அரிமளம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு வழங்கும் விதை நெல் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விதை நெல் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 20, 2024

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா இன்று (20/08/2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்துல் ரசூல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News August 20, 2024

குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

image

புதுகை ஆட்சியரக வளாகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். கூட்டத்தில் 13 ஒன்றியங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்து 660 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News August 20, 2024

தபால் துறையில் உத்தேச பட்டியல் வெளியீடு

image

நாடு முழுவதும் தபால் துறையில் 44,228 காலிப்பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, புதுகை மாவட்டத்தில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 120 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியானது. முழு விவரங்களை https://indiapostgdsonline.gov.in/# என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

News August 20, 2024

சிபிசிஐடி போலீசாருக்கு ஒரு மாத கால அவகாசம்

image

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்கு தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாத கால அவகாசம் கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிபிசிஐடி போலீசாருக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

News August 19, 2024

ஈ.பி.எஸ் உடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

image

சென்னையில் இன்று நடைபெற்ற லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் கல்லீரல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர். முகமது ரேலாவின் இல்லத் திருமண நிகழ்வில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அவருடன் புதுக்கோட்டை அதிமுக மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

News August 19, 2024

சிறுபாண்மை பெண்களுக்கு நிதியுதவி

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (19.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில், இஸ்லாமிய பெண்களுக்கு சிறுதொழில் தொடங்கும் வகையில் நிதி உதவித்தொகைக்கான காசோலைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் (பொ) தாஸூகி ஆர்.ரம்யாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!