Pudukkottai

News April 6, 2024

புதுக்கோட்டையில் அதிரடி சோதனை

image

மக்களவைத் தேர்தலையொட்டிவெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீஸார் புதுக்கோட்டை வந்துள்ளனர். நேற்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் அவர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.பயணிகளின் பைகளில் மெட்டல் டிடெட்டர் கருவிகளைக் கொண்டு சோதனை செய்தனர்.வெடிகுண்டு தடுப்பு காவல் உதவி ஆய்வாளர் அருணகிரி தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது.

News April 6, 2024

புதுக்கோட்டை தேர்தல் பணிகள்: ஆட்சியர்கள் ஆய்வு!

image

புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு வைப்பறை மற்றும் தேர்தல் பணிகளை திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆட்சியர்கள் மா.பிரதீப்குமார்,
ஐ.சா.மெர்சி ரம்யா ஆகியோர்
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது வருவாய்க் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, தேர்தல் அலுவலர் க.ஸ்ரீதர், வட்டாட்சியர்கள் பரணி, விஜயலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

News April 5, 2024

புதுகை: மீன்பிடி திருவிழா

image

புதுகை அருகே குளத்துபட்டி கிராமத்தில் அமைந்துள்ள சிறுமாக்கண்மாயில் பாரம்பரிய‌ மீன்பிடி உபகரணமான ஊத்தா மூலம் மீன்களை பிடிக்கும் மீன்பிடி திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதில்,மீன்பிடி ஆர்வலர்கள் ஒன்றன்பின் ஒன்றாக போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கத் தொடங்கி ஊத்தாவை வைத்து நாட்டு வகை மீன்களான கட்லா,ரோகு,சிசி,பாப்லட்,கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட மீன்களை லாபகமாக பிடித்து சென்றனர்.

News April 5, 2024

புதுகை: டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் வருகின்ற நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நார்த்தமாலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்தும், அதை ஈடுசெய்ய ஏப்ரல் 13ஆம் தேதி வேலைநாளாக இருக்கும் என உத்தரவிட்டுள்ளது.

News April 4, 2024

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நார்த்தமாலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்தும், அதை ஈடுசெய்ய ஏப்ரல் 13ஆம் தேதி வேலைநாளாக இருக்கும் என உத்தரவிட்டுள்ளது.

News April 4, 2024

மாவட்ட தேர்தல் அலுவலர் விழிப்புணர்வு

image

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதனையடுத்து புதுக்கோட்டை போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பதட்டமான வாக்குசாவடிகளை கண்டுபிடித்து அதற்கு எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசனை செய்தனர்.

News April 4, 2024

புதுகையில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்!

image

திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து இன்று புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ,வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.கே செல்லபாண்டியன், புதுகை எம்எல்ஏ வை.முத்துராஜா, மாநகரக் கழக செயலாளர் ஆ.செந்தில் மற்றும் திமுக நிர்வாகிகள் தீப்பெட்டி சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.அதில்,பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 4, 2024

புதுகை: தோ்தல் புகாா்களை சி-விஜில் செயலியில் தெரிவிக்க அழைப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பான புகாா்களை இந்திய தோ்தல் ஆணையத்தின் சி-விஜில் என்ற செயலி மூலம் தெரிவிக்கலாம் என மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா. மொ்சி ரம்யா அழைப்பு விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகாா்களை பொதுமக்கள் தங்களின் கைப்பேசி வாயிலாக செயலி மூலம் தெரிவிக்கலாம் என கூறினார்.

error: Content is protected !!