Pudukkottai

News April 8, 2024

புதுக்கோட்டை:அலுவலர்களுக்கு தேர்தல் பணிப்பயிற்சி !

image

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான முதல்கட்ட தேர்தல் பணிப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேற்று தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலெட்சுமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ்.வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் அஞ்சல் வாக்குகளை வாக்குப்பெட்டியில் செலுத்தினர்.

News April 7, 2024

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மழையா?

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News April 7, 2024

புதுகை: தாயை அரிவாளால் தாக்கிய மகன் மீது வழக்கு

image

புதுகை, போசம்பட்டியை சேர்ந்தவர் மீனா இவரது மகன் வினோத்குமார் ஆகியோருக்கு இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத்குமார் மீனாவை அரிவாளால் தாக்கியதாக மீனா கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வினோத்குமார் மீது
வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 7, 2024

புதுகையில் வெடிகுண்டு சோதனை

image

மக்களவைத் தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிகளுக்காக ஏற்கெனவே மத்திய ஆயுதக் காவல் படை போலீஸாா் புதுக்கோட்டை வந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதேபோல வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீஸாா் புதுக்கோட்டை வந்துள்ளனா். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் அவா்கள் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

News April 7, 2024

புதுக்கோட்டை கோட்டை மாரியம்மன் திருவிழா

image

புதுக்கோட்டை போஸ் நகர் அருள் பாலஸ்ரீ கோட்டை மாரி அம்மன் திருவிழாவை முன்னிட்டு இன்று முகூர்த்தக்கால் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.இவ்விழா வருகின்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விழா நடைபெற உள்ளதால் இவ்விழாவில் 31 வது வார்டு கவுன்சிலர் சுமதி பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் காலையில் 5: 30 மணியளவில் முகூர்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News April 7, 2024

விராலிமலை அருகே சாலை விபத்து: ஒருவர் பலி!

image

மதுரையைச் சேர்ந்த காஞ்சனா(60). இவர் தனது மகன் தினேஷ் உடன் நேற்று காரில் செங்கல்பட்டு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். விராலிமலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவே தடுப்பு கட்டையில் மோதி பலத்த காயமடைந்த காஞ்சனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தினேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விராலிமலை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 7, 2024

புதுக்கோட்டையில் இந்தியா கூட்டணி தீவிரப் பிரச்சாரம்!

image

புதுகையில் I.N.D.I.A கூட்டணியின் திருச்சி எம்பி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து நேற்று திருமுருகன் காந்தி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை நகரில் அண்ணாசிலை, புதிய பேருந்து நிலையம் மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியிலும் நேற்று அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்றது.

News April 6, 2024

மீண்டும் களம் இறங்கும் தொகுதி மீட்புக் குழு

image

புதுக்கோட்டை மக்களவை தொகுதியில் 2009ஆம் ஆண்டு தொகுதி மீட்புக் குழு தொடங்கப்பட்டது.மேலும் குழுவினால் 2009ஆம் ஆண்டு நாட்டில் முதல் முறையாக நோட்டாவிற்கு 15 ஆயிரம் வாக்குகள் விழுந்தன. 2014இல் 51 ஆயிரம் வாக்குகளும்,2019இல் 43 ஆயிரம் வாக்குகளும் தொகுதி மீட்புக் குழு மூலமாக நோட்டாவிற்கு விழுந்தன.இந்த நிலையில் மீண்டும் தொகுதி மீட்புக் குழு தற்போது களமிறங்கி நோட்டாவிற்கு தீவிர பரப்புரை செய்துவருகின்றனர்

News April 6, 2024

தேர்தல் பிரச்சாரம் தீவிரம்

image

I.N.D.I.A கூட்டணியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி புதுகை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீப்பெட்டி சின்னத்தில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர்.வை. முத்துராஜா ஈடுபட்டார். இந்நிகழ்வின்போது ஒன்றிய கழகச் செயலாளர்கள் மு.க.ராமகிருஷ்ணன், சாமிநாதன் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

News April 6, 2024

புதுக்கோட்டை:தோ்த் திருவிழா ஏப்ரல்-8 உள்ளூா் விடுமுறை

image

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழாவை முக்கிய நிகழ்வாக ஏப். 8 இல் (திங்கள்கிழமை) நடைபெறும் தேரோட்டத்தையொட்டி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் ஏப். 13 ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டது.

error: Content is protected !!