Pudukkottai

News April 11, 2024

குடிநீா்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

image

கறம்பக்குடி அருகே குடிநீா் கோரி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனா். கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு சில வாரங்களாக குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

News April 10, 2024

வாகனம் மோதி உயிரிழந்த புள்ளிமான்

image

திருமயம் அரசு குடோன் அருகே திருச்சி- காரைக்குடி பைபாஸ் சாலையை புள்ளி மான் ஒன்று நேற்று சிலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் புள்ளிமான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே செத்தது. இதனை அறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று புள்ளி மான் உடலை மீட்டனர்.

News April 10, 2024

சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்

image

புதுகை, ஊரப்பட்டியை சேர்ந்தவர் விஜயநிலா. இவர்
நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் விஜயநிலா உடலை ஊரப்பட்டி சுடுகாட்டில் புதைத்துள்ளனர் . விசயம் வெளியே கசியவே , இதுகுறித்து வீஏஒ பாஸ்கரன் விஜயநிலா சாவில் சந்தேகம் இருப்பதாக அன்னவாசல் போலீசில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News April 9, 2024

புதுகை சட்டமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிப்பு

image

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தொண்டைமான் ஊரணி பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் துரை வைகோ அவர்களை ஆதரித்து தீப்பெட்டி சின்னத்தில் புதுகை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வின்போது உடன் திமுக மாவட்ட துணைச் செயலாளர் SS கருப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.

News April 9, 2024

புதுக்கோட்டையில் மஞ்சள் நீராட்டு விழா

image

புதுக்கோட்டை நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற கீழ நான்காம் விதி வடபுறம் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலின் திருவிழா கடந்த நேற்று நடைபெற்றது. இந்நிலையில் திருவிழாவின் நிறைவாக மஞ்சள் நீராட்டு விழா மற்றும் முளைப்பாரி எடுக்கும் நிகழ்வு இன்று அதி விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் வழிபட்டு சென்றனர்.

News April 9, 2024

புதுகை: வாக்குச்சாவடி அலுவலா்கள் அஞ்சல் வாக்களிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலின்போது வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலா்கள் ஆகிய பணிகளில் பங்கேற்கும் அரசு ஆசிரியா்கள் தங்களின் அஞ்சல் வாக்குகளை ஞாயிற்றுக்கிழமை செலுத்தினா். அலுவலா்களுக்கான முதல் கட்ட தேர்தல் பணிப் பயிற்சி ராணியார் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

News April 9, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 வழக்குகள் பதிவு

image

மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட மாா்ச் 16 முதலே தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. 18 பறக்கும் படைகள், 18 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 6 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் பணியில் உள்ளனா். தோ்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலர் கூறினார்.

News April 9, 2024

குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

image

புதுக்கோட்டை நகரில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை கண்டித்து திருக்கோகர்ணம் பகுதியில் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.புதுக்கோட்டை நகராட்சியில் சில நாட்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்து வருகின்றன. தற்போது இந்தப் பிரச்னை பல இடங்களில் ஏற்படுகிறது.

News April 8, 2024

புதுக்கோட்டை அருகே வாலிபரின் விபரீத செயல் 

image

சிங்கம்புணரி அருகே முறையூரை சேர்ந்தவர் கருப்பையா. கொத்தனாரான இவர், நேற்று விஷம் குடித்து புதுக்கோட்டை மாவட்டம், கல்லூரில் ராமையா என்பவர் தோட்டத்தில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டுசெல்லும் வழியிலேயே கருப்பையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை

News April 8, 2024

புதுக்கோட்டை அருகே சரமாரி கத்திக்குத்து 

image

பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் எல்லைக்கோட்டை இன்று இளைஞருக்கு கத்திக்குத்து. இந்த கத்திக்குத்து சம்பவத்தில் உலகம்பட்டியை சேர்ந்த தீவுராஜ் (19) என்ற இளைஞர் காயமடைந்துள்ளார். அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!