India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன.அதன்படி புதுகை மாவட்டத்தில் மாணவர்கள் 82.83% பேரும், மாணவியர் 92.54% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 88.02% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 10 மணி வரை புதுக்கோட்டை , உள்ளிட்ட 7 மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவரது ஆடு அந்தப் பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தது. இது பற்றி கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். கிணற்றில் விழுந்த ஆட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை நகர் பகுதியில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது. தற்போது புதுக்கோட்டை நகரம் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதியில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் திருச்சபை சார்பில் வர்ண பகவானிடம் வெயிலின் தாக்கம் குறைந்து. நல்ல மழை பெய்ய வேண்டியும், நல்ல விவசாயம் செழிக்க வேண்டியும் , மக்கள் நலமாக இருக்கவும், சிறப்பு வழிபாடு கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.
தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி புதுகை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று(மே 13) காலை 7 மணி முதல் 10 மணி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் ஸ்ரீ
சங்கர மடத்தில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி கடந்த மே 8 ஆம் தேதி முதல் மே 11 ஆம் தேதிவரை திருவிடைமருதூர் பாடசாலாவின் வித்யார்த்திகள் நடத்திய வேதபாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று ஹோம நிகழ்ச்சிகள், பாராயண பூர்த்தி ஆகியன நடைபெற்றன. அதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அபிஷேக, ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டியில் பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை சாலையில், நேற்று பால் வேன் ஒன்று காலை முதலே நின்று கொண்டிருந்த நிலையில், மாலையில் அந்தவழியே சென்றவர்கள் அருகே சென்று பார்த்தபோது உள்ளே இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது புதுகை காந்தி நகரைச் சேர்ந்த தனியார் பால் வேன் ஓட்டுனர் குமரன்(25) எனத் தெரியவந்தது.
விராலிமலை அருகே, குடுமியான்மலையைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் என்பவரது மகன் ராஜபாண்டியன் (40).திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ளது. சென்னையில் பணிபுரிந்து விடுமுறையில் வந்த இவர் நெல்லிகுளத்தில் குளிக்க சென்று நீரில்ழூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அன்னவாசல் போலிஸார் நேற்று ராஜபாண்டியன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி, நற்பவளகுடியில் வசிப்பவர் சேவுகன்(65). இவர்
நேற்று தனது வீட்டின் அருகே புல், புதர்களை சுத்தம் செய்து
எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக அவர்மீதும் தீப்பற்றியது. புதுகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீஸார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.