India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம் கமுதி தாலுகா பங்களா புதுக்குடியை சேர்ந்தவர் சூரியா (21).இவரது நண்பர் சதீஷ்கண்ணன் (21).இருவரும் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று இருவரும் மோட்டார்சைக்கிளில் புதுக்கோட்டை நோக்கி பைபாஸ் ரோட்டில் சென்றனர்.புதுக்கோட்டையில் இருந்து வந்த லாரி பைபாஸ் ரோடில் இவர்கள் இருசக்கர வண்டி மோதியதில் சூரியா சம்பவ இடத்திலேயே பலியானார்.
அடுத்த மூன்று மணி நேரத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதனால் புதுக்கோட்டை மாவட்ட மக்களே அதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திருக்கோகா்ணம் அருங்காட்சியகம் அருகில் உள்ள பகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்களுக்கு அஞ்சல் வாக்குப் பதிவு செய்வதற்கான படிவங்கள் அவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கும் பணியை, மாவட்டத் தோ்தல் அலுவலா் ஐ.சா.மொ்சி ரம்யா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்டுள்ள 5,417 ஆண் வாக்காளா்களும் , 6,475 பெண் வாக்காளா்கள் உள்ளனர்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை கொண்ட ராட்சத பலூனை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேற்று பறக்க விட்டார். தொடர்ந்து நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை அங்கிருந்த பொதுமக்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய்க் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, ஆணையர் சியாமளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை. அரிமளம் ஒன்றியம் இரும்பாடி காந்தி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரவினா(23). இன்னும் திருமணமாகவில்லை. இதனால் மனவேதனையடைந்த பிரவினா வீட்டில் பேனில் தூக்குமாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏம்பல் எஸ்.ஐ.மனோகர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.
காட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஹரிஹரன் (13). இவர் நேற்று வயலோகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து சைக்கிளை நிறுத்தி விட்டு வந்த ஹரிஹரனை அதே பகுதியை சேர்ந்த ராமன் என்பவர் மது போதையில் கட்டையால் தாக்கியதில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று ராமனை போலீசார் கைது செய்தனர்.
மழவராயன்பட்டியை சேர்ந்தவர் குமார் இவருக்கும் இவரது சகோதரர் தங்கராஜூக்கும் நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.பின்னர் சிறிது நேரத்தில் குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உறவினர்கள் மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மக்களவைத் தோ்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெறப்பட்ட 516 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தோ்தலையொட்டி உரிமம் பெற்று, துப்பாக்கி வைத்துள்ளோா் அவரவா் எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்பது தோ்தல் ஆணையத்தின் நிலையான உத்தரவு என கூறினார்கள்.
மணப்பாறை சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார்.தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று மோட்டார் சைக்கிளில
அன்னவாசல் அருகே சொக்கநாதன்பட்டி என்னும் இடத்தில் சென்றபோது அருகே சென்ற போது எதிரே வந்த 108 ஆம்புலன்ஸ் வசந்தகுமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் வசந்தகுமார் உயிரிழந்தார். போலீசார் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உலகநாதன் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.