India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு விடுபட இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நமக்கு சர்வாதிகாரம் தேவையில்லை என்றும் ஜனநாயகம்தான் தேவை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
காட்டுப்பட்டியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.
பல ஆண்டுகளாக கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்து தராததால் லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், அரசியல் கட்சியினர் யாரும் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என இன்று நோட்டீஸ் வெளியிடபட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த வடுகப்பட்டி பகுதியில் உள்ள உதய பாரதி என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்த தேசிய பறவையான மயில் அதைப்பார்த்த கிராம மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் அவர்கள் மயிலை பத்திரமாக மீட்டு வனத்துறையில் விட்ட கந்தர்வகோட்டை தீயணைப்பு துறையினர்..
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனிப்படை போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்னாங்கண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன்
என்பவர் மளிகை கடையில்
புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார்
சிவசுப்பிரமணியனை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இரும்பாளியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, இவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் நேற்று மார்ச் 28-ந்தேதி மாலை திடிரென தீ பிடித்தது. பின்னர் மலமலவென பிடித்த தீயினால் வைக்கோல் போர் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினா் போராடி தீயை அணைத்தனர்
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்ப்பட்ட தெற்கு மூன்றாம் வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளை நேற்று காலை புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் பொதுமக்கள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை, அறந்தாங்கியை அடுத்த திருவாப்பாடியில் உள்ள ஏரியில் அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் சடலம் 27 ஆம் தேதி காலை கண்டெடுக்கப்பட்டது. விக்னேஷ் மரணத்திற்கு அறந்தாங்கி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பெரியசாமியின் மகன் தமிழ்வேந்தன் , அவரது நண்பர் யோகேஸ்வரன் ஆகியோர்தான் காரணம் எனக் கூறிய அவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவப்பாடியில் விக்னேஷின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகே கம்மங்காடு மேலப்பட்டியை சேர்ந்தவர்
ராஜேஷ் அவரது மகன் ரோகித் இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் வாரச்சந்தைக்கு சென்று வீட்டு வீட்டிற்கு திரும்பிய போது அந்த வழியாக மேலப்பட்டியை சேர்ந்த தர்மராஜ் அதேபகுதியை குணா ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும், ராஜேஷ் வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் ராஜேஷ், ரோகித், விஷ்ணு ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (28) இவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் நேற்று குளிக்கச் சென்றார்.ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கினார்.நீச்சல் தெரியாததால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சமபவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை நகர் பகுதியில் இன்று அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது இந்த நிலையில் புதுக்கோட்டை நகரில் அதிமுகவினர் கோவில்பட்டி, திருக்கோகர்ணம் பகுதிகளில் மகளிர் அணி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.