Pudukkottai

News October 9, 2024

புதுகை மீனவர்கள் கைது: பெயர்கள் வெளியீடு

image

ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்தனர். அதன்படி ரமேஷ், ஜானகிராமன், கிருஷ்ணன், குமார், ராஜ், ரவீந்தர், உலகப்பன், அருள்நாதன், வைத்தியநாதன், குமரேசன், மகேஷ், மதன், விஜய், விக்கி, மகேந்திரன், முனியவேல், சிவகுமார், சூர்யா, சூர்ய, பிரகாஷ், கருப்பசாமி கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ளனர். SHAREIT

News October 9, 2024

எல்லைத்தாண்டி வந்ததாக கூறி புதுகை மீனவர்கள் 21 பேர் கைது

image

புதுக்கோட்டை அடுத்த ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இலங்கை கடற்படையால் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

News October 9, 2024

புதுகை மேயர் தலைமையில் முதல் மாமன்ற கூட்டம்

image

புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயராக திலகவதி செந்தில் இன்று அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் பதவியேற்றார். இந்நிலையில், மேயர் திலகவதி செந்தில் தலைமையில் இன்று முதல் மாமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆட்சியர் அருணா, MLAக்கள் மாமன்ற உறுப்பின்னர்கள் பங்கேற்றனர்.

News October 9, 2024

கீரனூர் அருகே 4 பேர் கைது

image

நார்த்தாமலை அருகே பொம்மாடிமலையில் தகட்டு கல் கடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் அங்கு நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அப்போது, இரண்டு யூனிட் கல் (தகடுகள் ) கண்டுபிடித்தனர். இது தொடர்பாக இளவரசன் (42), முத்து (38), ஐயப்பன் (27), சின்னதுரை (24), ஆகிய 4-பேரையும் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

News October 9, 2024

புதுக்கோட்டையில் இன்று வரலாற்று சாதனை

image

புதுக்கோட்டை நகராட்சி 120 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த நகராட்சியில் தற்போது 11 ஊராட்சிகளை இணைத்து 70 வார்டு கொண்ட மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று மேயராக திலகவதி செந்தில், துணைமேயராக லியாகத் அலி பதவி ஏற்கின்றனர். இதில் அமைச்சர்கள் நேரு, ரகுபதி, மெய்யநாதன் கலந்து கொள்கின்றனர். இது ஒரு வரலாற்றுச் சாதனையாக கருதப்படுகிறது.

News October 9, 2024

தமிழக பிற்பட்டோர் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பிறந்த நாள்

image

அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் தனது 55வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவர் 9.10.69 ஆண்டு மறமடக்கியில் பிறந்தார். 2016ஆம் ஆண்டு முதல் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். 2021முதல் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் தற்பொழுது பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளராக இருப்பது மட்டுமல்லாது தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கிறார்.

News October 8, 2024

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை: ஆட்சியர் அழைப்பு

image

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்துள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, 10ஆம் வகுப்பில் தோல்வி பெற்றவர்களுக்கு மாதம் 200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300, பட்டதாரிகளுக்கு மாதம் 600 வீதம் 3 ஆண்டுக்கு பெற புதுக்கோட்டை ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 8, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்

image

புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை காலை 9 மணியிலிருந்து 2 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விருப்பமுள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 8, 2024

மன்னர்கள் பெயரில் அளவைகள் “காலச்சுவடு”

image

17ஆம் நூற்றாண்டில் மன்னர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் பெயரில் அக்காலத்தில் “அளவைகள்” இருந்தன புதுக்கோட்டையில் புதுக்கோட்டை படி சின்ன படி ,பெரிய படி, பல்லவன் படி, ஆகிய ஆகியவையும் தஞ்சை ஆட்சியாளராக இருந்த ஹாரிஸ் என்பவரது நினைவாக ஹாரிஸ் படி என்ற அளவையும் புழக்கத்தில் இருந்தன.
பிற்காலத்தில் அதுவே ஒரு படி, அரைப்படி, கால் படி, வீசம், என மாறியது. Way 2 News காலச்சுவடு தொடரும். ஷேர் செய்யவும்

News October 8, 2024

புதுக்கோட்டையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

image

வரலாற்றிலேயே புதுக்கோட்டையில் இருந்து தூத்துக்குடிக்கு முதல் நேரடி சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து விடப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டையில் புதன்கிழமை காலை 9:00 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு மதியம் 1.50 மணியளவில் சென்றடையும் பிறகு தூத்துக்குடியிலிருந்து மாலை 4.15 மணி அளவில் புறப்பட்டு புதுக்கோட்டைக்கு 9 மணியளவில் வந்தடையும். இது ஆயுத பூஜைக்காக ஒரு நாள் விடப்பட்ட சிறப்பு ரயிலாகும்.

error: Content is protected !!