Pudukkottai

News May 10, 2024

புதுகையில் மழைக்கு வாய்ப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

புதுகை அருகே 12 ஆண்டுகளாக 100% தேர்ச்சி

image

மதியநல்லூர் அரசு உயர் நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 % தேர்ச்சி பெற்றது. இப்பள்ளியானது தொடர்ந்து 12 ஆண்டுகளாக 100% சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளியின் மாணவன் பவிக்சாத் 464 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இப்பள்ளியின் தொடர் வெற்றியை பாராட்டி இன்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் இராமசாமி ஆசிரியர், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

News May 10, 2024

புதுகை 17ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி புதுகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 85.95 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.52 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று புதுக்கோட்டை மாவட்டம் 17ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

10th RESULT: புதுக்கோட்டையில் 91.84% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி புதுகை மாவட்டத்தில் 91.84% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 88.78% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.81% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 10, 2024

புதுகை: நாய் கடித்ததில் 12 நபர்கள் காயம்

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அம்மன்குறிச்சி ஊராட்சி  சொக்கநாதப்பட்டி பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் உட்பட 12 பேரை நாய்கள் கடித்துள்ளது. இதில் எட்டு நபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த அசம்பாவிதத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 9, 2024

புதுக்கோட்டை: நாளை பள்ளி வாகனங்கள் ஆய்வு!

image

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் மாவட்ட எஸ்பி முன்னிலையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது. இதில் வாகனச்சான்றுகள், ஓட்டுநர், நடத்துனர் உரிமம் சரிபார்க்கப்படும். மேலும், ஓட்டுநர் பெயர்வில்லை, சீருடை, நடப்பிலுள்ள தீயணைப்பு, வேகக்கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி மருந்துகள், ஜிபிஎஸ், கண்காணிப்பு கேமராக்கள் ஆகியனவும் சரிபார்க்கப்பட உள்ளது.

News May 9, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (மே.09) நண்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும். கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

புதுக்கோட்டை:10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2024

புதுக்கோட்டையில் மழை பெய்யுமா?

image

பதுகையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் அளவானது 20 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருந்து வந்தது.இதனைத் தொடர்ந்து புதுகையில் இந்த வாரம் வெயிலின் தாக்கம் கடந்த வார்த்தை காட்டிலும் அதிகமாக 20 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி வரை இருக்கும் என்று அத்துடன் அதிகமான வெப்பம் காரணமாக மிதமான 50 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

News May 8, 2024

சித்தன்னவாசல் குடைவரைக் கோயில் சிறப்பு!

image

உலகப்புகழ் பெற்ற சித்தன்னவாசல் சமண குடைவரைக் கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. இந்த சமண குடைவரைக் கோயிலில் 7-8ஆம் நூற்றாண்டை சேர்ந்த சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. இதில் வரையப்பட்ட சித்திரங்கள் தாவரங்களில் இருந்து பெற்றப்பட்டவை. சரியான பராமரிப்பின்றி இருந்த இக்குகையில் ஓவியங்கள் மங்கத் தொடங்கியது. 1990களில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது.

error: Content is protected !!