India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100-ஐ அழைக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

பியூசின்னப்பா நகர், கே எல் கே எஸ் நகர், புதுக்கோட்டை நகரில் இன்று இரவு மின்பழுது ஏற்பட்டால் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்ணை 94987 94987 மாவட்டம் மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதன்படி இரவு நேர புகார்களுக்கு என்ற தொலைபேசி எண்ணின் மூலம் பொதுமக்கள் மின்பழுது சம்பந்தமான புகாரை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் மின்பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய கூடாது என கேட்டுக் கொண்டுள்ளனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் நாளை (நவ.9) காலை 10 மணி முதல் 1 மணி வரை குடும்ப அட்டைகள் ரேஷன் கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

திருமயம் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான பெருமாள் கோவில் சிவன் கோவில் இரு திருக்கோவிலிலும் நாளை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி சிவன் கோவில், பெருமாள் கோவில் சாலைகளின் இருபுறங்களிலும் வாகனங்களை பக்தர்களுக்கு இடையூறின்றி நிறுத்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், பிரச்சனைகளுக்கான உதவியைக்கோரும் வகையிலும் ‘போலிஸ் அக்கா’ திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேற்று தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 30 பெண் போலிஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

படித்த வேலையற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான இளைஞர் திறன் திருவிழாவானது புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊடக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பாக வரும் 9ஆம் தேதி அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் 16ஆம் தேதி புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது. படித்த வேலையற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்மானிப்பட்டைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் நேற்று(நவ.5) திடீரென்று வீட்டில் இருந்து காணாமல் போனார். இவருக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் ஒரு மகன் உள்ளார். இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கறம்பக்குடி போலிஸார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னமராவதி தாலுகா கொப்பனாபட்டி காட்டுப்பட்டி விளக்கில் முதியவரின் ஆண் சடலம் கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு இறந்தவர் யார்? எந்த ஊர்? கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

கந்தர்வகோட்டை அருகே கருப்புடையான்பட்டியைச் சேர்ந்தவர் குஞ்சான் மகன் தங்கராஜ்(53). இப்பகுதியில் ஆடு மேய்த்து வந்த இவர் நேற்று பிசானத்தூர் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள கொட்டகையில் ஆடுகளை அடைத்தார். பிறகு சாலையை கடக்க முயன்ற போது பைக் மோதியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தங்கராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டையில் வருகின்ற நவ.8ஆம் தேதி காலை 9 மணி அளவில் புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக எம்.பி. அப்துல்லா ஏற்பாட்டில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஸ்ரீ பாரதி கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. கிராமப்புறத்தைச் சேர்ந்த அனைத்து மாணவ, மாணவிகள் இதில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என எம்.பி. அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.