Pudukkottai

News July 13, 2024

புதுக்கோட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்கள் 2024ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது பெற தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04322- 228840 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் மெர்சி ரம்யா செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

News July 13, 2024

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு ஒத்தி வைப்பு

image

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த போது அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி சுபத்ரா தேவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

News July 13, 2024

ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் இன்று(ஜூலை.13) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், நியாய விலைக்கடை தொடர்பான குறைகள் குறித்து மனு அளிக்காலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News July 12, 2024

புதுக்கோட்டை: விடுமுறை அறிவிப்பு

image

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்தார்.

News July 12, 2024

புதுக்கோட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புற கலை பயிற்சி வகுப்புகள் நாளை 13ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இப்பயிற்சியில் நாடகம், கிராமியப் பாட்டு, கரகாட்டம், தப்பாட்டம் ஆகிய கலைகளில் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் சேரலாம். ஓராண்டு பயிற்சிக்குப் பின்னர் அரசுத் தேர்வு நடத்தப்பட்டு பல்கலைக்கழகம் மூலம் சான்றிதழ் வழங்கப்படும் என ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News July 12, 2024

புதுக்கோட்டை : மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி (மாலை 7 மணி வரை ) புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News July 12, 2024

துரை சாவுக்கு நீதி வேண்டும்

image

புதுக்கோட்டை, திருவரங்குளத்தில் நேற்று பிரபல ரவுடி துரை என்பவரை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில் நேற்று அரசு மருத்துவமனையில் துரையின் அக்கா சசிகலா நிருபருக்கு பேட்டி அளித்தார். அதில் என் தம்பி மீது எந்த வழக்கும் இல்லை. எல்லா வழக்குகளையும் முடித்து வைத்து விட்டான். காட்டுபகுதியில் அவன் பதுங்கியதாக பொய் செல்கிறார்கள். அவனது சாவுக்கு நீதி வேண்டும் என கூறினார்.

News July 12, 2024

45 பேரின் ரத்த மாதிரி சேகரிப்பு; வீடு வீடாக ஆய்வு

image

புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் மஞ்சள் காமாலை அறிகுறி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் நேற்று(ஜூலை.11) 20 பேர் கொண்ட மருத்துவகுழுவினர் வீடு வீடாக சென்று 45 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

News July 11, 2024

புதுக்கோட்டையில் ரவுடி என்கவுண்டர்

image

புதுக்கோட்டை அருகே வம்பன் தைல மரக்காட்டுப்பகுதியில் இன்று (ஜூலை 11) மாலை திருச்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரவுடி துரை என்பவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.ரவுடி துரையை பிடிக்கச் சென்றபோது ஆலங்குடி காவல் உதவி ஆய்வாளர் மாகலிங்கத்தை அரிவளால் வெட்டியதில் காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் படுகாயமடைந்தார்.இதனால் ரவுடி துரையை காவல்துறையினர் சுட்டத்தில் ரவுடி உயிரிழந்தார்.

News July 11, 2024

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி (இரவு 7 மணி) வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!