India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, அத்திப்பள்ளம் என்ற இடத்தில் பட்டாசு குடோனில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் கார்த்திக் (27) என்பவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த குடோன் உரிமையாளர் வேல்முருகன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுகை மகாராணி ரோட்டரி சங்கம் சார்பாக மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட நீச்சல் போட்டியை இன்று புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா துவக்கி வைத்து வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வின்போது மகாராணி ரோட்டரி சங்க புதுக்கோட்டை தலைவர் கருணை செல்வி, அரசு வழக்கறிஞர் சிவா, ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் சங்கன் விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரத்தில் சி பி சி ஐ டி வழக்கு பதிந்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சி பி சி ஐ டி சண்முகம் என்பவரின் வழக்கை தொடர்ந்து விசாரித்த நீதிமன்றம் சிபிசிஐடிக்கு மாற்றி இருந்தது. மேலும் விசாரணை தொடங்கிய நிலையில் குடிநீர் தொட்டிகள் மாட்டு சாணம் கலக்கவில்லை என முடிவுகளில் தெரியவந்தது.
புதுக்கோட்டை, திருமயம் பகுதியில் என்ற அமைந்துள்ளது 106ஆவது திவ்ய தேசமான சத்திய மூர்த்தி பெருமாள் கோயில். இக்கோயில் முத்தரையர்கள் கால குடைவரைக் கோயில் எனக் கருதப்படுகிறது. இதில் சத்தியமூர்த்தி, திருமெய்யர் என இரு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமையைக் குறிக்கும் விதத்தில் இக்கோயில் உள்ளது. 1000 முதல் 2000 ஆண்டுகள் முன் பழமையான இக்கோயிலில் பல வரலாற்றுக் கல்வெட்டுகள் கிடைக்கப்பெற்றன.
நடப்பாண்டிற்கான தமிழ்நாடு கடல் மீன் பிடி ஒழுங்குமுறை சட்டம் 19 83ன் படி மீன்பிடி தடைக்காலத்தில் அனைத்து வகை மீன் படகுகளை ஆய்வு செய்வது குறித்து ஜூன் ஐந்தாம் தேதி மட்டும் ஆறாம் தேதி சிறப்பு குழுக்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட உள்ளது.மீன்பிடி நாட்டுப் படகுகளை மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மீனவ கிராம கூட்டுறவு சங்கத்திற்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக புதுகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை மற்றும் காரைக்கால் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புயுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் புதுகை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை புதுகை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி படிப்பை இடையே நிறுத்திவிட்டு, மாணவா்கள் எங்கேனும் வேலைக்கு சோ்ந்திருப்பது தெரியவந்தால், அதுகுறித்து அந்தந்தப் பகுதி வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவுறுத்தினாா். புதுகையில் நான்கு நாட்கள் பள்ளிப் பொதுத்தோ்வுகள் குறித்து பகுப்பாய்வு அறிக்கையைக் கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார்.
மழையூர் அருகே உள்ள வெள்ளாளவிடுதியை சேர்ந்தவர் வினோத் (32).இவரது மனைவி செல்வி (25). இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு செல்வி வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (மே.18) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.