Pudukkottai

News December 6, 2024

சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது வழக்கு

image

இலுப்பூர் அருகே கோத்திராப்பட்டியை சேர்ந்தவர் கோபால் (22). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், சிறுமியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி இலுப்பூர் மகளீர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் கோபால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

News December 5, 2024

புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (05.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News December 5, 2024

புதுகை: லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

image

புதுகை சோலார் தெருவிளக்கு அமைப்பதில் முறைகேட்டில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அறந்தாங்கி அரிமளம் கரம்பக்குடி திருமயம் திருவரங்குளம் மணமேல்குடி குன்றாண்டார் கோவில் கந்தர்வகோட்டை பகுதிகளில் வேலை பார்க்கும் BDO கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் மற்ற துறை அரசு அலுவலகங்கள் பீதியில் உள்ளனர்.

News December 4, 2024

எஸ்.பி. தலைமையிலான குற்ற ஆய்வுக் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட அனைத்து காவல் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பணி தொடர்பான மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மொத்தம் 38 நபர்களை (04.12.2024) இன்று நேரடியாக வரவழைத்து பாராட்டினார்.

News December 4, 2024

புதுக்கோட்டை: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

புதுக்கோட்டையில் மின்சார வாரிய இயக்குதலும், காத்தலும் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை, இலுப்பூர், கந்தர்வகோட்டை பகுதிகளுக்கான மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து மின்வாரிய சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என மின்சார வாரிய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 3, 2024

சிறுவனை கடித்த தெருநாய்

image

கரம்பக்குடி சுக்கூர் மகன் 4 1/2 வயது சிறுவன் தனியார் மெட்ரிக் பள்ளியில் LKG படித்து வருகிறார். நேற்று மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது தெரு நாய் ஒன்று இவரை கன்னம், தோள்பட்டையில் கடித்துக் குதறியது. அலரல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் நாயை அடித்து விரட்டி விட்டு உடனடியாக சிறுவனை கரம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News December 2, 2024

புதுக்கோட்டை மாவட்ட ரோந்து பணி விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும், இரவு நேரத்தில் காவல் பாதுகாப்பு பணி குறித்த விபரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏதேனும் அசம்பாவித நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News December 2, 2024

புதுக்கோட்டை மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை முருகன் நகர், அண்ணா நகர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டால் 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் யாரேனும் மீட்டர் பெட்டி, ட்ரான்ஸ்பார்மர், மின்கம்பங்களில் ஏறக்கூடாது என தமிழ்நாடு மின்சார வாரிய உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News December 2, 2024

விராலிமலை சாலைப்பகுதியில் 1000 புதிய மரக்கன்றுகள்

image

தமிழகமெங்கும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 340 சாலைகளில் பல்வேறுவகை மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதன்படி புதுகை – விராலிமலை, மணப்பாறை சாலையில் ஆரியக்கோன்பட்டி, திருநாடு சாலையோரப் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அவை விரைவில் வளர்ந்து நிழல் தரும் என்று கண்காணிப்பு பொறியாளர் செந்தில் உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

News December 1, 2024

புதுகையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருணா தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்நாள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை, ஊரவ வளர்ச்சித் துறை சார்ந்த துறைகளின் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்ட சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!