India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற புத்தக கண்காட்சியின் மூன்றாவது நாளான இன்று சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ மெய்யநாதன் கலந்து கொண்டு இசை இலக்கிய நிகழ்ச்சிகள் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு அரசு சார்ந்த துறையினர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், கொட்டகம்பை கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர், தனது இரு மகன்களை இராணுவத்திற்கு அனுப்பியமைக்காக, தமிழக அரசின் போர் பணி ஊக்க மானியம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மச்சுவாடி கொட்டகைக்கார தெருவை சேர்ந்த முத்துலட்சுமி என்ற ஊனமுற்ற பெண்ணிற்கு ஆந்திராவைச் சேர்ந்த பிரபல யூடுபர் ஹர்ஷா சாய் ஐந்து லட்ச ரூபாய் ரொக்கமாக கையில் கொடுத்து சென்றுள்ளார். வசதியின்றி பத்தாம் வகுப்பை பாதியிலே நிறுத்தியதை கற்கை நன்றே அறக்கட்டளையின் அறிந்து உதவி செய்துள்ளார். எந்த அறிவிப்புமின்றி பிரபல யூடுபர் திடீரென புதுக்கோட்டைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுகை ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் வக்பு நிறுவனத்தில் பதிவு பெற்ற பள்ளி வாசல்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு, இருசக்கர வாகனம் வாங்கிட மானியத்திற்கான காசோலைகளை, மாவட்ட ஆட்சியர் அருணா வழங்கினார். இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா கலந்து கொண்டார்.
கந்தர்வகோட்டை அடுத்த கீழக்கோட்டை கிராம ஊர்மக்கள் தங்களுடைய ஊரில் உள்ள 3 குளங்களை ஆக்கிரமிப்புகள் செய்ததை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணாவிடம் கீழக்கோட்டை கிராம மக்கள் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியரிடம் மனுவை வழங்கினர். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை, கொத்தமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி கூறியதாவது: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. மாணவர்களுக்கான கல்விக் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை. சாதாரண மக்களின் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு குறைத்துக் கொண்டு வருகிறது. தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது என்றார் அவர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கொத்தமங்கலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சி உறுப்பினர்களை மக்களவையிலும், அதேபோல நிதி ஆயோக் கூட்டத்திலும் பாஜக அரசு பேச விடுவதில்லை. இது எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் செயலாகும். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது நடந்த தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் 25 நிமிடம் பேசினார். அப்போது யாரும் குறுக்கிடவில்லை என்றார் அவர்.
புதுக்கோட்டை மாவட்டம், குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், அரசுப் பேருந்து நடத்துநர்.இவர், கடந்த 2008-ஆம் ஆண்டு பணியின்போது உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது மூத்த மகள் கவுரீஸ்வரி (28), பிகாம் பட்டதாரி. பணியின்போது, உடல் நலக்குறைவால் உயிரிழந்த தந்தையின் நடத்துநர் பணியைப் பெற்று, புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநர் என்ற பெருமையைப் கவுரீஸ்வரி பெற்றுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் 11/07/2024 முதல் 10/09/2024 வரை நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் 30/07/2024 முள்ளு ஊராட்சி, அறந்தாங்கி ஊராட்சி, பொன்னமராவதி ஊராட்சிக்கு சிலட்டூர் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நாளை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.