India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பல்வேறு துறைகள் சார்ந்த பணிகளின் முன்னேற்றம் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெளியே செல்லுவோர் முன்னெச்சரிக்கையோடு இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மைதானத்தில் நடந்து வரும் 7வது புத்தக திருவிழாவின் 5ஆம் நாளான இன்று பள்ளி மாணவர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். பின்னர், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். மேலும் புத்தக திருவிழாவில் நாளுக்கு நாள் பள்ளி மாணவர்களின் கூட்டம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கருத்துக்களை commentsல் பதிவிடவும்.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவின் தந்தை வைரக்கண்ணு உடல் நலக்குறைவால் இன்று(ஜூலை 31) காலை இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலம், நல்லடக்கம் நாளை(ஆக.,1) புதுக்கோட்டை அருகே அன்னசத்திரம் கிராமத்தில் நடைபெறும் என எம்எல்ஏ அலுவலகம் அறிவித்துள்ளது. மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் வைரக்கண்ணு முன்னாள் பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆலங்குடி மேல சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (75). அதே தெருவை சேர்ந்த முருகன் மகன் குமரேசன் (25). இவர், வீடு கட்டியபோது கிருஷ்ணமூர்த்தி பணம் கொடுத்து உதவியுள்ளார். தற்போது, கிருஷ்ணமூர்த்தி வீடு கட்டுவதால் அதற்கு குமரேசனிடம் பண உதவி கேட்டுள்ளார். குமரேசன் தர மறுத்துள்ளார். இதில் வாக்குவாதம் முற்றியதில் குமரேசன் முதியவரை தாக்கி கொலை செய்துள்ளார்.
புதுக்கோட்டை நகராட்சியின் கடைசி கூட்டம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர்மன்ற கூட்டத்தில் அதன் தலைவர் திலகவதி செந்தில் தலைமையில் நடைபெற்றது. இதில், நகராட்சியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதிய பேருந்து நிலையத்தை அமைப்பது குறித்தும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஓச்சப்பட்டியில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஊருக்குள் அனுமதிக்க அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை கட்டாததால் பெண்ணின் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைப்பதாகவும், கோவிலுக்கு வரி செலுத்த தடை விதிப்பதாகவும் ஊர் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, பெண்ணின் தாயார் காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் வழக்கத்தை விட 55% அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. இந்நிலையில், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் மேலத்தெருவை சேர்ந்த பல் மருத்துவர் அப்துல் மஜித் (36). இவர், அதே பகுதியில் பல் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் இவரது மருத்துவமனைக்கு 17 வயது சிறுமி தனது தாயுடன் பல் வலிக்காக சிகைச்சை பெற வந்துள்ளார். தாயாரை மருந்து வாங்க அனுப்பிவிட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் பல் மருத்துவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அதேபோன்று கந்தர்வகோட்டையில் மாட்டு சானம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.