India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை நரிமேட்டிலுள்ள அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து குற்ற வழக்குகளில் தொடர்புடைய மூன்று சிறுமிகள் கடந்த மாதம் தப்பியோடினர். இதில் போலீசார் விசாரணை நடத்தி திருச்சி மற்றும் மதுரையிலிருந்து 2 சிறுமிகளை மீட்டு இல்லத்தில் சேர்த்தனர். இந்நிலையில் திருக்கோகர்ணம் போலிஸார் மற்றொரு சிறுமியையும் சென்னையிலிருந்து மீட்டு அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் நேற்று சேர்த்தனர்.
புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாமை
நேற்று ஆட்சியர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்து பேசியது- ‘மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில், 19 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இச்சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது’ என்றார்.
புதுக்கோட்டை, நகராட்சி அம்பாள்புரம் 1ம் வீதி சீடு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் இயங்கும் கிரசண்ட் மனவளர்ச்சி குறைபாடு உடையோருக்கான சிறப்பு பள்ளியில் மதிய உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், சீடு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கும் விழாவானது இன்று (ஜூன்10) நடைபெற்றது. இந்நிலையில் மழவராயன்பட்டியை சேர்ந்த புஷ்பராணி என்ற பெண் மாவட்ட அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றிக் கொண்டு என்னுடைய வீட்டை எனக்கு வாங்கித் தர வேண்டும் என கூறியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அன்னவாசல் அருகே அண்ணா பண்ணையைச் சேர்ந்தவர் மரியசூசை என்பவரது மனைவி லீலா மேரி (50). சம்பவத்தன்று இவர் வீட்டிலிருந்து டீ கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த லீலா மேரி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த அன்னவாசல் போலிஸார் லீலா மேரியின் உடலை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் மாணிக்கவாசகர் அருளிச்செய்த எட்டாம் திருமுறை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி ஆலயமூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, வழிபாடு மற்றும் திருவாசக முற்றோதல் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோகர்ணம் நத்தம் பண்ணையைச் சேர்ந்தவர் பாஸ்கர் (55). இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் புதுக்கோட்டை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர்லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ஆதனக்கோட்டை காவல் சார்பு ஆய்வாளர் மரியதாஸ் இறந்தவரின் உடலை புதுகை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை வண்டிப்பேட்டையை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கலியமூர்த்தி என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் ரைஸ்மில் பஸ்நிறுத்தம் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் கலியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சரவணன் படுகாயமடைந்தார். இதுகுறித்து செம்பட்டிவிடுதி
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா விடுத்துள்ள அறிவிப்பில் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின்கீழ் 5 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி 10.06.2024 முதல் 10.07.2024 வரை அனைத்து கிராமங்களிலும் போடப்பட உள்ளதால் கால்நடை வளர்ப்போர் முகாம் நடைபெறும். இடங்களுக்கு தவறாமல் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டு பயன் பெறலாம். என அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.
இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, புதுகை உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Sorry, no posts matched your criteria.