India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகர் பகுதி பிருந்தாவனம், மச்சுவாடி, திருக்கோகர்ணம், மேட்டுப்பட்டி, அன்னவாசல், இலுப்பூர், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்றைய தினம் இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு 7.9 மிமீ ஆக பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 13,03,130 பேருக்கு நோய் தொற்றா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 4,39,455 நபர்களுக்கு தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மக்களை தேடியும் மருத்துவம் சிறப்பாக செயல்படுகிறது எனவும், மேலும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு முகாம் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார். ஷேர் செய்யவும்
கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலையிலும், தெற்கு மாவட்ட திமுக சார்பில் அறந்தாங்கி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அண்ணா சிலை அருகில் அமைக்கப்பட்டிருக்கின்ற கலைஞர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது என அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று புத்தக திருவிழா நிறைவு விழா நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இந்த புத்தக திருவிழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சியர் அருணா மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பரதநாட்டியம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆடிய மாணவிகளை சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த அய்யப்பன் கோமதி தம்பதியினரின மகள், தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவி பார்கவி கேரளா மாநிலம், வயநாட்டுப்பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக ரூ.10,000 ரொக்கமாக மாவட்ட ஆட்சியரிடம் இன்று வழங்கினார்
அரிமளம் அருகே உள்ள செங்கீரை கிராமத்தின் சில பகுதிகளை பிரித்து இராயபுரம் ஊராட்சியுடன் இணைத்திடும் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று கிராம நிர்வாக அலுவலகத்தில் முற்றுகையிட சென்ற பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது எனவும் கிராம மக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென சி.விஜயபாஸ்கர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த 10-நாட்களாக நடைபெற்று வரும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நிகழ்வு இன்று பத்தாவது நாளாக நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாலை 7 மணி அளவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
மன்னர் கல்லூரி மைதானத்தில் ஏழாவது புத்தகத் திருவிழாவின் இறுதி நாளான இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் 05.08.2024 மாலை 06.30 மணியளவில், புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 7-வது புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளார்.
புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 28 மார்த்தாண்டபுரம் மஹாராஜா பேக்கரி அருகில் உள்ள சந்தினை தூய்மைப்படுத்தும் நிகழ்வினை மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி நேரில் சென்று பார்வையிட்டு பணி விவரங்களை கேட்டறிந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களை பாராட்டு விதத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அறிமுகம் ஒன்றிய பெருந்தலைவர் மேகலா முத்து கலந்து கொண்டு மக்களை தேடி மருத்துவத்தில் மக்களை தேடி சிறப்பாக சிகிச்சைகள் மேற்கொண்ட செவிலியர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டுக்கள் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.