Pudukkottai

News December 29, 2024

புதுகை: திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

image

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள், பாலியல் வன்கொடுமை, கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து நாளை (டிச. 30) ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக விராலிமலை எம்எல்ஏ, விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார், இதில் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

News December 29, 2024

பொன்னமராவதி டிஎஸ்பிக்கு பதவி உயர்வு

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளராக ஜூலியஸ் சீசர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு தென்காசி சைபர் கிரைம் ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு அறிவிக்கிபட்டுள்ளது. பொன்னமராவதி டிஎஸ்பியாக பணிபுரிந்து தென்காசி ஏடிசி எஸ் பி யாக பதவி உயர்வு பெற்றுள்ள காவல் துறை கண்காணிப்பாளருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

News December 29, 2024

புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி

image

தமிழ்நாடு முதல்வர் காணொலிக்காட்சி வாயிலாக நாளை (டிச.30) காலை 10 மணியளவில், புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் நிகழ்ச்சியினை தொடங்கி வைக்க உள்ளார்.  புதுகை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி ஆகியோர், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 

News December 29, 2024

புதுக்கோட்டையில் இரவு போலீசார் ரோந்து பணி விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விபரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமாயின் இதில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 28, 2024

விளையாட்டு வீரர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

தேசிய, சர்வதேச விளையாட்டுகளில் கலந்து கொண்ட மற்றும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் Veterans cell HQ Southern Comf- ஆல் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள் 10.1.2025, புதுகை முன்னாள் படை வீரர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News December 28, 2024

மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றுவது தவறு: ஆட்சியர்

image

உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி மனித கழிவுகளை மனிதன் அகற்றுவது குற்றமாகும். மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெற்றால் அது குற்றம் எனவும் இது சம்பந்தமாக துறை சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக புகாரை பொதுமக்கள் வழங்கலாம் என ஆட்சியர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News December 28, 2024

ஆவுடையார் கோவில்: கஞ்சா விற்ற சிறுவன் கைது

image

ஆவுடையார் கோவில் ஆண்டி குளம் அருகே நேற்று (டிச.27) மதியம் 2 மணிக்கு ஆவுடையார் கோவில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கூரிய வகையில் நின்றுகொண்டிருந்த 17 வயது சிறுவனை பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

News December 27, 2024

புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (27.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News December 27, 2024

புதுகை விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார்கள் நுண்ணீர் பாசன இணைப்புடன் வழங்கப்பட உள்ளது. வேளாண்மை துறையின் மூலம் 90 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.13.50 இலட்சத்திற்கு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

News December 27, 2024

புதுகை பிரிட்டிஷ் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

image

புதுகை அரிமளம் சாலையில் பிரிட்டிஷ் காலத்து கல்வெட்டினை தமிழ் துறை மற்றும் தொல்லியல் வரலாற்று பேராசிரியர் காளிதாஸ் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர் இதில் “ஒற்றை புலி குடியிருப்பு 2 பர்லாங்” என்று எழுதப்பட்டுள்ளது 1680 முதல் 1948 ஆண்டுக்குள் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆண்டாலும் தமிழில் எழுத்துக்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!