Pudukkottai

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

image

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT

News August 14, 2024

ஊராட்சி மன்ற தலைவர் அமைச்சரிடம் வாழ்த்து

image

மத்திய அரசு சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்கு சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான விருதைப் பெற்ற திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தருக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் விருதை காண்பித்து ஊராட்சி தலைவர் சிக்கந்தர் வாழ்த்து பெற்றார்.

News August 14, 2024

அன்னவாசலில் குழந்தையை கொஞ்சிய எம்பி ஜோதிமணி

image

கரூர் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இன்று அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பங்கேற்றார். அப்பொழுது கூட்டத்தில் ஒரு பெண் வைத்திருந்த கைக்குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். இதில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் செல்ல பாண்டியன் உடனிருந்தார். இதுகுறித்த கருத்துக்களை பதிவிடவும்.

News August 14, 2024

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

image

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியில் ரயில்வே நிலையம் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ரயில் நிலையத்தில் நாளை 76வது சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில், போலீசார் ரயில்வே ட்ராக்கில் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். அப்போது மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்பு அதிகாரிகள் ரயில்வே நிலையம் முழுவதும் சோதனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 14, 2024

புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு

image

புதுக்கோட்டை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய ஆணையராக டி நாராயணன் இன்று (ஆகஸ்ட்14) பொறுப்பேற்றார். முன்னதாக அவருக்கு மாநகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோன்று மாநகராட்சியில் பணியாற்றும் ,அதிகாரிகள் அலுவலர்கள் தங்களது வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

News August 14, 2024

அரசு பள்ளி முன்பு மாணவன் மீது தாக்குதல்

image

புதுக்கோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் நேற்று மாலை வகுப்பு முடிந்து வெளியே வந்த போது பைக்கில் வந்த மூன்று பேர் மாணவரை சராமரியாக தாக்கி பைக்கில் ஏற்றி சென்றனர். இதனை பார்த்த மக்கள் கூச்சலிடவே பின்னர் இறக்கி விட்டு சென்றனர். பள்ளியில் தன்னைப் பெரிய ஆளாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதால், சக மாணவர்கள் இவரை தாக்கியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

News August 14, 2024

விராலிமலை அருகே 8 பேர் கைது

image

மலைக்குடிப்பட்டியில் 10க்கும் மேற்பட்டோர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இலுப்பூர் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பணம் வைத்து சூதாடிய ராசு (51) கந்தசாமி (56) நல்லதம்பி (72) அண்ணாமலை (48) பச்சையப்பன் (63) தங்க பழனியாண்டி (72) வேலு (65) செல்வம் (56) உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இருவர் தப்பியோடினர்.

News August 14, 2024

அரசு பள்ளியில் நடிகர் அர்ஜுன்

image

திருமயம் அருகே உள்ள ராராபுரம் கிராமத்தில் தம்பி ராமையாவின் சம்பந்தியுமான, நடிகர் அர்ஜுன் ராராபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு சென்று பார்வையிட்டார். அங்கு அவருக்கு மாணவ, மாணவிகள் கைத்தட்டி வரவேற்பளித்தனர். பின்னர் அரசு பள்ளிக்குள் சென்ற நடிகர் அர்ஜுன், மற்றும் தம்பி ராமையா, அர்ஜுன் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா மாணவர்களை சந்தித்தனர்.

News August 13, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தின் நாளைய நிகழ்வுகள்

image

தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக நாளை காலை 10:30 மணியளவில், புதுக்கோட்டை மாவட்டம், குப்பையம்பட்டி, வளையம்பட்டி, ஊமையர் ஆகிய கிராமங்களில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் மகத் பூஞ்சோலையை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், குப்பயாம்பட்டி கிராமத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்க உள்ளார்.

error: Content is protected !!