India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டையில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடுவது ஏற்க முடியாதது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு அரசியல் தொடர்பான கொலையாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆளூநர் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவர் அளிக்கும் தேனீர் விருந்து கலந்து கொள்ளவில்லை” என விளக்கம் அளித்தார்.
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டு, சிறப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக சார்பாக கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘என் உயிரினும் மேலான’ என்ற தலைப்பில் மாணவ, மாணவர்களுக்கான பேச்சு போட்டி மாவட்டம் தோறும் திமுக இளைஞரணி சார்பாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் சனிக்கிழமை காலை புதுகை மாலையிடு கற்பக விநாயகா திருமண மண்டபத்தில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
கரூர் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியத்தில் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். தொடர்ந்து இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வருகின்ற 16ஆம் தேதி அன்னவாசல் ஒன்றியத்தில் எம்.பி. ஜோதிமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயர் திலகவதி செந்தில் நாளை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு தேசிய கொடியை ஏற்றி சிறப்பிக்க இருக்கிறார். நாடு முழுவதும் நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், மன்னர் ஆண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு முதல் பெண் மேயராக பதவி ஏற்றுள்ள திலகவதி செந்தில் நாளை கொடி ஏற்றுகிறார்.
புதுக்கோட்டை மாவட்ட அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் வெங்கடேசன் திமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர் முகநூல் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் இவருடைய முகநூலை போலியாக கணக்கு துவங்கியுள்ளனர். இதனை அறிந்த வெங்கடேசன் இந்த போலி முகநூல் பக்கத்தை யாரும் நம்ப வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுக்கோட்டையில் உள்ள 497 கிராம பஞ்சாயத்துகளிலும் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)
7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.
கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.
Sorry, no posts matched your criteria.