India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளும் இந்த முகாமில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகள் குறித்து விவாதித்து தீர்வு காண மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளுடன், தூண்டியவா்களையும் விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழா் தேசம் கட்சியின் சாா்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நேற்று (பிப்.1) மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக கூறி அக்கட்சித் தலைவா் உள்பட 230 பேரை போலீசார் கைது செய்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுகை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் உள்ள காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்ட செயல்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாணவ, மாணவிகள் இந்த உணவு திட்டங்களின் மூலம் தடையில்லா கல்வியை பெற்று வருவதை அதிகாரிகள் உறுதி செய்திடவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மாத்தூர், குளத்தூர், விராலிமலை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.1) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், ஆவூர், ஒடுக்கூர், மாத்தூர், உப்பிலிக்குடி, குண்டூர் உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரி உதவி செய்ய பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு அறந்தாங்கி வரும் போது வாமுனி கோவில் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 108 வாகனம் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. வாகனத்தில் வந்த கர்ப்பிணி பெண்ணை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

திருமயம் சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. அப்போது புகைப்படங்கள் ஏதும் எடுக்கக் கூடாது, ஊடகங்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி தரக்கூடாது, ஜகபர் அலி உடலை ஆய்வு செய்ய தேவையான வசதிகள் செய்து தர வேண்டும், மேலும் இந்த இந்த ஆய்வு திருமயம் வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுகையில் பிப்ரவரி 3ஆம் தேதி உலக ஈர நில தினத்தை ஒட்டி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வனத்துறை சார்பில் பேச்சு போட்டி, ஓவியப்போட்டி கட்டுரை போட்டி மன்னர் கல்லூரியில் நடைபெற உள்ளது. 1-ம் டூ 8-ம் வகுப்பு வரை ஓவியப்போட்டியும், 9-வகுப்பு முதல் கல்லூரி மாணவர் வரை ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி “நம் எதிர்காலத்திற்கான ஈர நிலங்களை பாதுகாத்தல்” என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அழகியநாச்சி அம்மன் கோயிலில் தரிசனம்.திரைப்பட சம்மந்தமாக பொன்னமராவதியில் தங்கியிருக்கும் நடிகர் யோகி பாபு அழகியநாச்சி அம்மன் கோயிலில் நாடு வளம் பெற, மழை பெய்திட, விவசாயம் செழிக்க எவ்வித இன்னல்கள் இன்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்க வேண்டுமென வேண்டி சிறப்பு வழிபாடு செய்தார்.

காரையூர் அருகே உள்ள ஆதினிப்பட்டியை சேர்ந்தவர் தேன்மொழி (20). இவர் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த நிலையில் இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. நாளை (ஜன.31) நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், தேன்மொழி திடீரென மாயமானார். இதனையடுத்து அவரது தந்தை பெருமாள அளித்த புகாரின் பேரில் போலீசார் தேன்மொழி எங்கே சென்றார், பெண் கடத்தலா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று (ஜன.29) புதுக்கோட்டை நான்காவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜாபர் பர்வேஷ், புதுக்கோட்டை மத்திய தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளராக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளர் ஜாபர் பர்வேஷ்க்கு கட்சியின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.