India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையைச் சேர்ந்த காஞ்சனா(60). இவர் தனது மகன் தினேஷ் உடன் நேற்று காரில் செங்கல்பட்டு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். விராலிமலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவே தடுப்பு கட்டையில் மோதி பலத்த காயமடைந்த காஞ்சனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தினேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விராலிமலை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுகையில் I.N.D.I.A கூட்டணியின் திருச்சி எம்பி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து நேற்று திருமுருகன் காந்தி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை நகரில் அண்ணாசிலை, புதிய பேருந்து நிலையம் மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியிலும் நேற்று அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மக்களவை தொகுதியில் 2009ஆம் ஆண்டு தொகுதி மீட்புக் குழு தொடங்கப்பட்டது.மேலும் குழுவினால் 2009ஆம் ஆண்டு நாட்டில் முதல் முறையாக நோட்டாவிற்கு 15 ஆயிரம் வாக்குகள் விழுந்தன. 2014இல் 51 ஆயிரம் வாக்குகளும்,2019இல் 43 ஆயிரம் வாக்குகளும் தொகுதி மீட்புக் குழு மூலமாக நோட்டாவிற்கு விழுந்தன.இந்த நிலையில் மீண்டும் தொகுதி மீட்புக் குழு தற்போது களமிறங்கி நோட்டாவிற்கு தீவிர பரப்புரை செய்துவருகின்றனர்
I.N.D.I.A கூட்டணியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி புதுகை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீப்பெட்டி சின்னத்தில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர்.வை. முத்துராஜா ஈடுபட்டார். இந்நிகழ்வின்போது ஒன்றிய கழகச் செயலாளர்கள் மு.க.ராமகிருஷ்ணன், சாமிநாதன் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழாவை முக்கிய நிகழ்வாக ஏப். 8 இல் (திங்கள்கிழமை) நடைபெறும் தேரோட்டத்தையொட்டி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் ஏப். 13 ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலையொட்டிவெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீஸார் புதுக்கோட்டை வந்துள்ளனர். நேற்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் அவர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.பயணிகளின் பைகளில் மெட்டல் டிடெட்டர் கருவிகளைக் கொண்டு சோதனை செய்தனர்.வெடிகுண்டு தடுப்பு காவல் உதவி ஆய்வாளர் அருணகிரி தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது.
புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு வைப்பறை மற்றும் தேர்தல் பணிகளை திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆட்சியர்கள் மா.பிரதீப்குமார்,
ஐ.சா.மெர்சி ரம்யா ஆகியோர்
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது வருவாய்க் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, தேர்தல் அலுவலர் க.ஸ்ரீதர், வட்டாட்சியர்கள் பரணி, விஜயலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுகை அருகே குளத்துபட்டி கிராமத்தில் அமைந்துள்ள சிறுமாக்கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி உபகரணமான ஊத்தா மூலம் மீன்களை பிடிக்கும் மீன்பிடி திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதில்,மீன்பிடி ஆர்வலர்கள் ஒன்றன்பின் ஒன்றாக போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கத் தொடங்கி ஊத்தாவை வைத்து நாட்டு வகை மீன்களான கட்லா,ரோகு,சிசி,பாப்லட்,கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட மீன்களை லாபகமாக பிடித்து சென்றனர்.
தமிழகத்தில் வருகின்ற நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நார்த்தமாலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்தும், அதை ஈடுசெய்ய ஏப்ரல் 13ஆம் தேதி வேலைநாளாக இருக்கும் என உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.