India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருமாம்பாக்கம், பனித்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் உமாபராதி (24). இவருக்கும், நரம்பை கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த இளைஞர் சிங்கப்பூரில் பணியாற்றுவதால் சொந்த ஊருக்கு வர தாமதம் ஏற்பட்டு, திருமணம் தடைப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த உமாபாரதி தற்கொலை செய்துகொண்டதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கிருமாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி – மாநில அளவிலான நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நேற்று நடைபெற்றது. இதில், ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியின் போது அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு கிராமம் சோழர் காலத்தில் மீனவ கிராமமாக இருந்ததாக கூறப்படுகிறது. இங்கு கி.மு 200 முதல் கி.பி 200 வரை கடல் வாணிபம் நடைபெற்றதாக அகழாய்வுகள் தெரிவிக்கின்றது. இங்கிருந்து ரோம் நகரத்திற்கு கடல் வாணிபம் நடைபெற்றுள்ளது. இங்கு ரோம் அரசரின் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள், ரெடகோட்டா பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இவ்விடத்தை பற்றி பிறருக்கும் பகிரவும்..!
புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள காவல் நிலைய எண்கள். கிராண்ட் பஜார் காவல் நிலையம் – 0413 2338876, முத்தியால்பேட்டை – 0413 2336066, காலாப்பட்டு – 0413 2655142, இலாசுபேட்டை – 0413 2234097, வில்லியனூர் – 0413 2666321, அரியாங்குப்பம் – 0413 2600477, காரைக்கால் நகர காவல் நிலையம் – 04368 222402, திரு.பட்டினம் – 04368 233480, நெடுங்காடு – 04368 261100, திருநள்ளார் – 04368 236465. பிறருக்கு பகிரவும்.
புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியில் இணை அமைச்சராகவும், மாநிலத்தின் முதவராகவும் உயர்பதவிகளை வகித்த நாராயணசாமி அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்றாகும். அவர் ஆட்சியில் இருக்கும் பொழுது எதையும் செய்யாமல் இருண்ட ஆட்சி அளித்த அவர் அரசை விமர்சனம் செய்ய எந்த உரிமையும் தகுதியும் இல்லை.” என கூறியுள்ளார்.
புதுவை ரெஸ்டோ பாரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராற்றில், சென்னை தனியார் கல்லுாரி மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரில் சிறப்புக் குழு தீவிர விசாரணை மூலம் நேற்று (ஆக.11) 6 பேரை கைது செய்தனர். மேல் விசாரணையில் அசோகராஜ் என்பவர் சம்பவத்தில் கத்தியால் குத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <
புதுவை, சேதராப்பட்டு துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று (ஆக.12) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சேதராப்பட்டு தொழிற்பேட்டை மேற்குப் பகுதி, கிழக்குப் பகுதி, பழைய காலனி, புதிய காலனி, சேதராப்பட்டு கிராமம், முத்தமிழ் நகர், கரசூர், கரசூர்பேட், கரசூர் – வானுார் சாலை, துத்திப்பட், உயர் மின்னழுத்தத் தொழிற்சாலைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ரெஸ்டோ பார் கொலை எதிரொலியாக, புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வரும் ரெஸ்டோ பார்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து புதுச்சேரி அரசு கலால் துறை சீல் வைத்துள்ளது.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரி ரெஸ்டோ பார்மாணவர் கொலை வழக்கில் காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இல்லையென்றால்
காங்கிரஸ் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.