India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை மற்றும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, அடுத்த 3 மணி நேரத்தில் புதுவை மற்றும் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,புதுவையில் மதியம் 1 மணி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் பொறுப்பேற்ற பிறகு கவர்னர் – முதல்வர் இடையே இணக்கமான சூழல் உள்ளது. ரேஷன் கடை திறப்பு, இலவச அரிசி திட்டம், ஆசிரியர் நியமனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. சட்டசபை கட்டுதல் திட்டத்திற்கும், வவுச்சர் ஊழியர்களின் 18 ஆயிரம் உயர்வு, இதனால் கவர்னருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களில் கவர்னரை பாராட்டி நேற்று முதல் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் நம் மாநிலத்திற்கு விடுதலை கிடைக்க அல்லும் பகலும் தன்னலம் கருதாது போராடி சுதந்திரம் பெற்று தந்த அத்தனை தலைவர்களின் தியாகங்களை நாம் இந்நாளில் போற்றி வணங்குவோம்.
நம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக, தன்னலமற்ற தலைவர்கள் காட்டிய தூய பாதையில் பயணித்து புதுச்சேரி வளர்ச்சிக்பாதைக்குச் செல்ல அயராது பாடுபடுவோம் என்றார்
வெடி வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம். SHARE IT.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாப்படும் நிலையில், பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட புதுவை மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள். SHARE IT.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் நம் வாழ்வில் புதிய வெளிச்சம் பிறக்கிறது என்றால் அது புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த தீபாவளித் திருநாள் எல்லோருடைய வாழ்விலும் எல்லா வளமும் நலமும் மகிழ்ச்சியும் கொண்டுவந்து சேர்க்கும் நல்ல தொடக்கமாக அமையட்டும் என்றுகூறி புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் எனது உளங்களிந்த தீபாவளி நல்வாழ்த்துகள் என குறிப்பிட்டிருந்தார்.
புதுவை விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். 1,579 சிறு, குழு விவசாயிகள் கடன் தொகை ரூ.11.61 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தவணையாக ரூ.2 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதி தொகை ரூ.9.61 கோடி கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளின் கடன்களை நேர் செய்து, புதிய கடன்களை வழங்க அறிவுறுத்தப்படுகின்றன அறிவுறுத்தப்படுகின்றன.
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவர் மைக்கேல் மிதிவண்டி பழுதுநீக்கும் தொழிலாளி. 2014-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் கொடுமை செய்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம் நிரூபணமானதால் மைக்கேலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.டி.சுமதி நேற்று தீர்ப்பளித்தார்.
புதுச்சேரி டிஐஜியாக சத்திய சுந்தரம் ஐ.பி.எஸ், காரைக்கால் மாவட்ட எஸ்எஸ்பியாக எம்.வி.என்.வி.லெக்ஷ்மி சுஜன்யா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், டிஐஜி பிரிஜேந்திர குமார் யாதவ் ஆயுதப்படை டிஐஜி ஆகவும், சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்எஸ்பியாகவும், குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.எஸ்.பி கலைவாணன் சட்டம்-ஒழுங்கு எஸ்.எஸ்.பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவப் பேராசிரியா்கள் 26 போ், உதவி பேராசிரியா்கள் 35, காரைக்கால் ஜிப்மரில் மருத்துவப் பேராசிரியா்கள் 2, உதவி பேராசிரியா்கள் 17 என மொத்தம் 80 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் நவம்பா் 21ஆம் தேதி மாலை 4.30 மணி வரையில் ஜிப்மா் இணையதளத்தில் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என இயக்குனர் ராகேஷ் அகர்வால் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.