India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வுகள் நடந்து முடிந்து, மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியானவர்கள் பட்டியல் மற்றும் காலியிடங்கள் குறித்த விவரங்களை சென்டாக் நிர்வாகம் நேற்று (பிப்.3) வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (பிப்.4) ஜிப்மர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி, பொதிகை நகர், வாசன் நகர், செவிலியர் சீனிவாசன் நகர், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு, ராஜாஜி நகர், ராஜய்யா தோட்டம், கிருஷ்ணசாமி தோட்டம், கண்ணிய வீதி, குயவர் பாளையம், புதுச்சரம், பிருந்தாவனம் மேற்கு, காமராஜ் நகர், பிள்ளை தோட்டம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற விழாவில் பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்காக உயர்கல்வித்துறை மூலம் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படும் தனியாக டெண்டர் விட்டு தனியார் மூலம் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க உயர்கல்வித்துறை இயக்குனருக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
லாஸ்பேட்டையை சேர்ந்த காளிமுத்து மகன் சபரிவாசன் எம்.டெக்.படித்துள்ளார். இந்நிலையில் அவரது செல்போன் எண்ணுக்கு மாத ஊதியத்துடன் வேலை இருப்பதாக கூறி குறுஞ்செய்தி லிங்க் வந்துள்ளது. அந்த செயலிக்குள் அவர்கள் கேட்டபடி பலரிடம் கடன் வாங்கி சபரிவாசன் ஐந்து லட்ச ரூபாய் செலுத்தி ஏமாந்தார். இதனால் அவர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பாக கேட்கிறீர்கள். இதில் கட்சித் தலைமைதான் முடிவு எடுக்கும். நான் கட்சியின் சாதாரண தொண்டன் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவை பட்ஜெட்டில் கலப்பு திருமணம் செய்த தம்பதிக்கு திருமண உதவித்தொகை ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இந்த கோப்பை கவர்னர் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இதற்கான அரசாணையை செயலர் கந்தன் இன்று வெளியிட்டார்.
புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் காரைக்கால் மீனவர்கள் காயமடைந்து பாதிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது என தெரிவித்தார்.
பேரறிஞர் அண்ணாவின் 56 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. அதனை ஒட்டி புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், குடிமைப் பொருள் வழங்க துறை அமைச்சர் திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் செயலாளராகவும், புதுச்சேரி தெற்கு வருவாய் கோட்டம் துணை ஆட்சியராக இருந்த சோம ஷேகர் அப்பாராவ் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும் 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் அடுத்த நிரவி பகுதியில் தொழில் உரிமம் பெறாமல் நிரவி கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட விழிதியூர், கீழமனை, நிரவி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் கடை மற்றும் தொழில் நடத்துவது ஆய்வின் போது தெரியவந்தது. தொழில் உரிமம் இன்றி கடை / தொழில் நடத்துபவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே உடனடியாக தொழில் உரிமம் பெற்று சட்ட நடவடிக்கையை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.